உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜனாதிபதி திரவுபதி முர்முகாஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இதுகண்டனத்திற்கு .ரியது. சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.பிரதமர் மோடிகாஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாகொடூரமான பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம். கடுமையாக தண்டிப்போம்.வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம். பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காஷ்மீரில் சுற்றுலா பயணி உயிரிழக்கவும் காயமடைந்ததற்கு காரணமான தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்கு உரியது. மனம் வேதனை அளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் .பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் ஒன்றுபட்டு உள்ளது. காஷ்மீரில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனக் கூறுவதை விட்டுவிட்டு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். அப்பாவி இந்தியர்கள் உயிர் இழக்க மாட்டார்கள். காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாபயங்கரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. வீரர்களின் ரத்தம் கொதிக்கிறது. இந்த கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் கடுமையான விலை கொடுப்பார்கள் எனு உறுதி அளிக்கிறேன்.காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஇந்த சம்பவம் அதர்ச்சி அளிக்கிறது. சம்பவத்திற்கு காரணமானவர்கள் விலங்குகள் ஆகவும், மனத நேயத்திற்கு எதிராகவும் இருப்பவர்கள். கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் போதாது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.தேஜஸ்வி சூர்யா பா.ஜ., எம்.பி கூறியதாவது:இன்று அதிகாலை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஸ்ரீ மஞ்சுநாத்தின் மனைவி திருமதி பல்லவியுடன் நான் பேசினேன். அவர்கள் கர்நாடகாவின் ஷிமோகாவைச் சேர்ந்தவர்கள்.காயமடைந்த மற்ற குடும்ப உறுப்பினர்களுடனும் பேசியுள்ளோம். உள்ளூர் நிர்வாகம் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.கர்நாடக தலைமைச் செயலாளருடனும் நான் பேசினேன். அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் ஒருங்கிணைப்போம்.இவ்வாறு தேஜஸ்வி சூர்யா கூறினார்.ஸ்டாலின், இ.பி.எஸ்., விஜய் கண்டனம்காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Seekayyes
ஏப் 23, 2025 10:08

கண்டனம் தெரிவிச்சாச்சு, சரி, நன்றி. எப்ப பயங்கர தீவிரவாதத்தை ஒழிக்கறதா உத்தேசம். 11 வருஷமா தீவிரவாதத்த ஒழிச்சிட்டோம், அமைதியில கஷ்மீர் உருளுதுனு சொன்னிங்க? என்னாச்சு? இல்ல எப்பவும் போல உருட்டா??


Tetra
ஏப் 23, 2025 11:00

மத்திய அரசிடம் இருந்த வரைக்கும் ஒழுங்காகதான் இருந்தது. வந்தான் ஓமான். திரும்பியது தீவிரவாதம்.


Kasimani Baskaran
ஏப் 23, 2025 04:07

உள்ளுக்குள் ஆதரவு இருப்பதால்தான் இப்படி ஒரு ஆட்டம் போடுகிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் புல்லுருவிகளை போட்டுத்தள்ள வேண்டும்.


Kulandai kannan
ஏப் 22, 2025 22:29

தமிழகம் முழுதும் பாஜக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும்.


எஸ் எஸ்
ஏப் 22, 2025 22:16

பதிலடி கொடுத்து தீவிரவாதிகளை கொல்ல வேண்டும். இதை கூட தேர்தல் ஸ்டண்ட், வக்ஃப் விஷயத்தில் திசை திருப்பும் வேலை இன்று கொச்சைபடுத்த இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது


skrisnagmailcom
ஏப் 22, 2025 22:05

இந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி விரிவான செய்திகள் வெளியிட தமிழக ஊடகங்கள் தயங்கும் மேலிட உத்தரவு அப்படி மற்றபடி இபிஎஸ் ஆளுநர் இந்தி இந்த மாதிரி விஷயங்களை மட்டுமே விலாவரியாக விவாதிப்பார்கள்


mei
ஏப் 22, 2025 21:49

இந்தியாவில் முஸ்லிம்கள் பாத்துக்காப்பாக இருக்க காரணம் இந்துக்கள் தான், நினைவு வைத்து கொள்ளுங்கள்


Srprd
ஏப் 22, 2025 21:46

Don't blame only the neighbouring country. Who were those who provided support to these terrorists ?


SP
ஏப் 22, 2025 21:23

தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது தேவையில்லாமல் மனித உரிமையை பேசினால் அவர்கள் மேல் தான் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்


Tetra
ஏப் 23, 2025 11:02

சரியான கருத்து


பெரிய ராசு
ஏப் 22, 2025 21:10

ராகுல் இந்த கொங்கிரஸ் தான் காரணம்


கிஜன்
ஏப் 22, 2025 20:53

கோழைகள் விரைவில் பிடிபடுவார்கள் .... வரைபடத்தில் பார்க்கும்போது ....இந்த இடம் எல்லைப்புற நகரம் கூட அல்ல .... ஸ்ரீநகரின் கிழக்கு ....மத்தியப்பகுதி .... இந்த அளவு எப்படி ஊடுருவினார்கள் ? இனி மரியாதை கிடையாது ....வீடு வீடாக சோதிக்க வேண்டியது தான் ...


முக்கிய வீடியோ