உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து அமைப்பினருக்கு குறிவைத்த பயங்கரவாதிகளின் சதி. முறியடிப்பு! 8 பேர் சிக்கினர்

ஹிந்து அமைப்பினருக்கு குறிவைத்த பயங்கரவாதிகளின் சதி. முறியடிப்பு! 8 பேர் சிக்கினர்

குவஹாத்தி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் முக்கிய ஹிந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல் - குவைதாவுக்கு நெருக்கமான வங்கதேச பயங்கரவாதி உட்பட எட்டு பேரை, அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். இதனால், நாடு முழுதும் நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது.தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் - குவைதா அமைப்பின் கிளையான, 'அன்சாருல்லா பங்க்ளா டீம்' என்ற அமைப்பு, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஜசிமூதின் ரஹ்மானி உள்ளார்.இவரது நெருங்கிய உதவியாளரான முஹமது பர்ஹான் இஸ்ராக், நம் நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் முக்கிய ஹிந்து அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில் இது தொடர்பான ஆலோசனையில் அன்சாருல்லா குழுவின், 'ஸ்லீப்பர் செல்கள்' ஈடுபட்டுள்ளதாக அசாம் போலீசாருக்கு, உளவுத் துறை சமீபத்தில் தகவல் அளித்தது. கண்காணிப்பு தீவிரம்இதையடுத்து, அசாமில் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, வங்கதேசத்தில் இருந்து முஹமது சாப் ஷேக், 32, என்ற நபர் அசாம் வந்து தங்கியிருந்து சிலரை சந்தித்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவரை பின்தொடர்ந்ததில், மேற்கு வங்கத்திலும் அதைத் தொடர்ந்து கேரளாவிலும் சென்று வேறு சிலரை சாப் ஷேக் சந்தித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, மூன்று மாநிலங்களில் அவர் சென்ற இடங்களில் அசாம் அதிரடிப் படையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தினர். இதன் முடிவில், சாப் ஷேக்கை அதிரடிப் படையினர் கைது செய்தனர்.அவரிடம் நடந்த விசாரணையில், நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களின் விபரம் வருமாறு: மினருல் ஷேக், 40, முஹமது அப்பாஸ் அலி, 33, நுார் இஸ்லாம் மண்டல், 40, அப்துல் கரீம் மண்டல், 30, முஜிபுர் ரஹ்மான், 46, ஹமிதுல் இஸ்லாம், 34, எனாமுல் ஹக், 29. இவர்களில், நுார் இஸ்லாம் மண்டல், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சமீபத்தில் சென்று, அங்குள்ள இளைஞர்களை அல் - குவைதா மற்றும் அன்சாருல்லா குழுக்களில் சேர மூளைச்சலவை செய்ததாக அதிரடி படையினர் தெரிவித்தனர். நாசவேலைஇது குறித்து அசாம் சிறப்பு டி.ஜி.பி., ஹர்மீத் சிங் கூறியதாவது:வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல், நம் நாட்டில் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அச்ச உணர்வை, இந்த கைது சம்பவங்கள் நிரூபிக்கின்றன.இதுவரை நடந்த முதற்கட்ட விசாரணையில் இருந்து, கைது செய்யப்பட்டவர்கள் நாடு முழுதும் வன்முறை மற்றும் நாசவேலை சம்பவங்களில் ஈடுபட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படுகொலைகள், வகுப்புவாத நல்லிணக்கத்தை, அமைதியை சீர்குலைக்கும் சூழலை உருவாக்க அவர்கள் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அசாம், மேற்கு வங்கம், கேரளாவுக்கு சென்று, அங்குள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பினரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே, அவர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும், இவர்கள் திட்டம் குறித்த முழு விபரங்கள் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.அசாம் சிறப்பு அதிரடிப் படையினரின் முயற்சியால், நாடு முழுதும் நடக்கவிருந்த பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட்டுள்ள சூழலில், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.கைது சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Rasheel
டிச 21, 2024 16:29

கோயம்பத்துரில் 58 பேரை கொலை செய்தவனுக்கு வந்த கூட்டத்தை பார்த்தீங்களா? அப்பாவி ஹிந்துக்களை கொன்னவனுக்கு அவ்வளவு கூட்டம். இதுதான் அவனின் உண்மையான முகம்.


Rasheel
டிச 21, 2024 16:25

நம்ம எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒன்னு என்று சொல்லியே, பின்னாலே குழியை தோண்டுவான். அவனுக்கு வெள்ளி கிழமை போதிக்க படுவது, காபிர்களை கொல்வது பற்றித்தான். இன்னிக்கு சவூதி அரேபியா டாக்டர் ஒருவன், அமைதி வழியில் 2 அப்பாவி மக்களை கொன்று உள்ளன. ஒவ்வரு பிரியாணி பொட்டலத்திலும், ஹலால் ஆடு இறைச்சியிலும் இவளவு ஆபத்து இருப்பது பல போலி திராவிடனுக்கு தெரிய வாய்ப்பில்லை.


ameen
டிச 20, 2024 13:54

அம்பேத்கார் குறித்த அவதூறு செய்தியை திசை திறப்ப வந்துந்துட்டாங்க போலிருக்குது....


சித்தறஞ்சன்
டிச 21, 2024 02:40

மடத்தனமாக கதைக்க வேண்டாம். அம்பேத்கரை இரண்டு முறை தோற்கடித்தது காங்கிரஸ்தான். இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஏதோ தியாகிகள் போல் சித்தரிப்பதனால் தான் உங்களின் இஸ்லாமிய சமயத்தை ஒருத்தரும் மதிப்பதில்லை


CBE.pk
டிச 20, 2024 12:26

இதுங்கள தீவிரவாதிணு சொன்னால் ரோஷம் வேற வருது.


Kasimani Baskaran
டிச 20, 2024 10:56

முளைச்சலவை செய்தால் இது போல பக்கிகள் பல உருவாவதற்கு பிரிட்டிஷ் கால அடிமை கல்வி முறைதான் காரணம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 10:54

கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில் இது தொடர்பான ஆலோசனையில் அன்சாருல்லா குழு... தமிழகமும், கர்நாடகமும் இந்த மாநிலங்களைப்போல அனுசரணையானவை .....


வாய்மையே வெல்லும்
டிச 20, 2024 10:54

இங்க நம்மிடையே வாசகர் போர்வையில் மாறுவேட ரூபத்தில் சுத்திகொண்டு இருக்கிற சாம்பிராணி ஆசாமிகள் வயிறு எரியும். அவர்களின் பெயரும் வினோதமாக இருக்கும்..


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 13:45

கரெக்ட்டா சொன்னீங்க... ஹிந்து கடவுளின் பெயர்களை நேரடியாக அப்படியே வைத்துக்கொள்ள கூச்சமாக இருக்கும் - ஏகன் கோபித்துக் கொள்வாரோ என்கிற தயக்கம். சிலர் மிகவும் கஷ்டப்பட்டு சனாதன எதிர்ப்பை மெல்லியதாக, வெங்காயத்தோல் அளவுக்கு கருத்தில் காட்டுவது படிக்க வேடிக்கையாக இருக்கும் .....


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 10:40

உலகம் முழுதும் மாற்று மதத்தவர் துடைத்தெறியப்பட்டாலும் இவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இருக்காது.. இதுதான் வேதனையான வேடிக்கை அல்லது வேடிக்கையான வேதனை ......


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 20, 2024 10:25

இவர்களை வெளிப்படையாகவே ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்து ஆட்சியில் அமர்த்தும் வாக்காளர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுக்கு வருங்கால சந்ததிகள் குறித்த கவலை இல்லையா??


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 10:50

அப்படியில்லை .... அவர்கள் ஆபத்தை உணராதவர்களாக இருப்பதுதான் உண்மை ..... திராவிடமாடல் சிந்திக்கும் ஆற்றலை கூர்மழுங்க வைத்துவிட்டது என்பதே உண்மை ....


Kumar Kumzi
டிச 20, 2024 10:17

என்னங்கடா இது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை