காஷ்மீரில் சண்டை பயங்கரவாதி சுட்டுக்கொலை
பாரமுல்லா:ஜம்மு - காஷ்மீரின் உரி செக்டாரில் ஊடுருவ முயன்ற பாக்., பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டார் பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நம் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, உரி செக்டாரின் புச்சார் பகுதியில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாக்., பயங்கரவாதிகள், நம் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மோதல் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.