உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குடியரசு தின விழாவுக்கு பயங்கரவாதி மிரட்டல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

டில்லி குடியரசு தின விழாவுக்கு பயங்கரவாதி மிரட்டல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடில்லி: டில்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழாவிற்கு, பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை இந்தியா அழைப்பது வழக்கம். கடந்த 2024ம் ஆண்டு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்றார். இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ பங்கேற்க உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=440unh3j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்நிலையில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த்சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள அவன் கூறியிருப்பதாவது: டில்லி, குடியரசு தின அணிவகுப்புக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பாதீர்கள், வீட்டிலேயே இருங்கள். மோடியின் இந்துத்துவா ஆட்சிக்கு, எதிராக தாக்குதல் நடத்துவோம். இதற்கு 1.25 லட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு குர்பத்வந்த்சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். சமீபத்தில் மஹா கும்பமேளா நிகழ்ச்சிக்கு மிரட்டல் விடுத்தான். இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: அமைதியான முறையில் குடியரசு தின விழாவை நடத்த அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அணிவகுப்பு நடக்க உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. வெடிகுண்டு செயலிழப்புப் படையின் உதவியுடன் கண்காணித்து வருகிறோம். நமது ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரர்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். சந்தேகத்திற்குரிய நபர்கள் வருகையை கட்டுப்படுத்த எல்லைகளை சீல் வைப்பது தொடர்பாக அண்டை மாநில போலீசாருடன் சமீபத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. எல்லைப் பகுதியில் வாகனங்கள் உட்பட அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்?* குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸின் புறநகரில் உள்ள கான்கோட் கிராமத்தில் பிறந்தவன் 1992 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தான்.குர்பத்வந்த் சிங் பன்னுன் தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில், ஜூலை 2020ல் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டான். * இவனது பயங்கரவாத அமைப்புக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இவன் இந்தியாவில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
ஜன 14, 2025 12:09

ஐம்பத்தாறு நம்மள பாதுகாக்குது ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ......


Nethiadi
ஜன 14, 2025 15:57

அது வெறும் பீலா தான், சங்கிகளின் கைக்கூலி தானே ஐம்பத்திறாரு,புதுசா கேக்குறீங்க.


Ray
ஜன 14, 2025 11:17

இது ஒரு சம்பிரதாயமான அறிக்கை ஒரு கடன் தீர்ந்தது இனி எதுவும் நடந்துவிடப் போவதில்லை ஆயிரக் கணக்கான படைகளுக்கு அஞ்சாருநாள் பராக்சை விட்டு வெளியே போகும்


Nethiadi
ஜன 14, 2025 10:07

rss பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும், சங்பரிவாளர் ஹிந்து தேச தீவிரவாதிகள் இந்த நாட்டை விட்டு அகற்ற வேண்டும்.


Sampath Kumar
ஜன 14, 2025 09:57

சரி இந்த கல்லால் அடித்து கொள்வது உங்க கலாச்சாரமா // அது மூர்க்கமத்தினர் உடையது கோப்பி அடித்தாலும் எவர்களாய கோப்பி அடிப்பார்கள் ஓகே ஓகே நீங்க மெல்ல மெல்ல மூர்க்கன் ஆவது புரிகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 11:49

ஏலே ..... நீயி ஹிந்து பெயரில் எழுதுற ????


Nethiadi
ஜன 14, 2025 15:53

இறைக்கொள்கை கொண்ட எங்களை மூர்கத்தினர் என்று சொல்வது விந்தையாக இருக்கிறது, விலங்கு ,பறவை,வானம்,பூமி,கல் என்று கண்டதெல்லாம் படைப்பினை வணங்கும் நீ மூர்க்கனா இல்லை இதனை எல்லா படைத்த ஓர் இறைவனை வணங்கும் நாங்கள் மூர்க்கர்களா, கொஞ்சம் பசு கொடுக்கும் பாலையும் குடி வெறும் பசு மாட்டு கோமியத்தை குடித்தால் மூளை எப்படி இருக்கும்.


subramanian
ஜன 14, 2025 08:16

தீவிரவாதிகளை பாகிஸ்தான் எல்லையில் வைத்து மிகுந்த கூச்சலுடன்.... பாரத மாதா கி ஜெய் என்று கோஷமிட்டு கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்


முக்கிய வீடியோ