உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவில் இந்தியாவில் கால்பதிக்கிறது டெஸ்லா நிறுவனம்?

விரைவில் இந்தியாவில் கால்பதிக்கிறது டெஸ்லா நிறுவனம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு, டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்ததற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதனை வைத்து, டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என தொழில்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆலோசனை

உலகின் முன்னணி மின்னணு கார் தயாரிக்கும் நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா விளங்குகிறது. சீனாவில் அந்த நிறுவனத்திற்கு கார் தயாரிக்கும் ஆலை உள்ள நிலையில், இந்தியாவிலும் ஆலை துவங்க திட்டமிட்டது. இது தொடர்பாக இந்திய அரசும், டெஸ்லா நிறுவனமும் பேசி வந்தன. இதற்காக எலான் மஸ்க் இந்தியா வர இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வருகையையும், பிரதமர் மோடியை சந்திப்பையும் எதிர்பார்த்து உள்ளதாக கூறியிருந்தார். ஆனால், அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. விரைவில் இந்தியா வருவேன் என எலான் மஸ்க் கூறியிருந்தார்.

வாழ்த்து

இந்நிலையில், பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‛‛ உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனம் சிறந்த பணி செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்'' எனக்கூறி இருந்தார்.

நன்றி

இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‛‛ எலான் மஸ்க்கை பாராட்டுகிறேன். திறமையான இந்திய இளைஞர்கள், நமது மக்கள் தொகை, கொள்கைகள் மற்றும் நிலையான ஜனநாயக அரசியல் ஆகியவை, எங்களது கூட்டாளிகளுக்கு வணிக சூழலை தொடர்ந்து வழங்கப்படும்'' எனக் கூறியிருந்தார். இந்த இருவரின் பதிவுகளை வைத்து, விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என தொழில்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S. Narayanan
ஜூன் 08, 2024 19:38

பிரதமர் மோடி மீது உள்ள நம்பிக்கை மற்றும் நிர்வாக திறமையால் மேலும் பல அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கும்.வாழ்க வளர்க. இந்தியாவில் வேலை வாய்ப்பு நிச்சயம் பெருகும் என்பது திண்ணம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 17:00

கட்டிங் கொடுக்காமலேயே எலோன் சீனாவில் தொழில் விரிவாக்கம் செய்ய முடியும் ... இந்தியாவில் அப்படியல்ல ...


Sankar Ramu
ஜூன் 08, 2024 18:05

நீங்க சொல்ரது திராவிட மாடல். மத்தியில் ஒரு பைசா செலவு செய்ய தேவையில்லை. மாநிலங்கள்தான் முன்வரனும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை