உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டெஸ்ட் கிரிக்கெட்: வாகனம் நிறுத்த தடை

டெஸ்ட் கிரிக்கெட்: வாகனம் நிறுத்த தடை

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், நாளை முதல், வரும் 20ம் தேதி வரை, இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.இதனால், மைதானத்தை சுற்றி வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. குயின்ஸ் சாலை, எம்.ஜி.சாலை - கப்பன் சாலை, ராஜ்பவன் சாலை; சென்ட்ரல் தெரு, கப்பன் சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை, மியூசியம் சாலை.கஸ்துாரிபா சாலை, அம்பேத்கர் வீதி, டிரினிட்டி சதுக்கம், லேவல்லி சாலை; விட்டல் மல்லையா சாலை, கிங்ஸ் சாலை, நிருபதுங்கா சாலை ஆகிய சாலைகளில், போட்டி நடக்கும் ஐந்து நாட்கள் வரை, தினமும் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், யூ.பி.சிட்டி, சிவாஜிநகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையம், கப்பன் பூங்காவின் கிங்ஸ் சாலையிலும் வாகனங்கள் நிறுத்தலாம்.ரசிகர்கள் வசதிக்காக, கப்பன் சாலையின் பி.ஆர்.வி., சதுக்கம், சி.டி.ஓ., சதுக்கம் ஆகிய இடங்களில் இருந்து டாக்சிகளில் செல்ல தற்காலிக வசதி செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை