உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு

பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு

நமது நிருபர்

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதாக கூட்டணி அறிவித்தனர்.சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரே. சிவசேனாவின் ஆரம்ப காலத்தில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, ஸ்ரீகாந்த் தாக்கரேவின் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக பணியாற்றினர். காலப்போக்கில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s0k9zeiv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தனிக் கட்சி

உத்தவ் தாக்கரேவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக கருதிய ராஜ் தாக்கரே, 2006ம் ஆண்டு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்ற தனிக் கட்சியை தொடங்கினார். அப்போது முதல் இரு சகோதரர்கள் இடையே பகை நிலவி வந்தது. சமீபத்தில் அரசியல் ரீதியாக இருவருக்கும் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, மீண்டும் இணைய முடிவு செய்தனர்.இதன்படி தான் ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே வெளியேறி உள்ளார். மும்பை உட்பட மஹாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளின் 2,869 வார்டுகளுக்கு, 2026 ஜனவரி 15ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் கட்சியும் ராஜ் தாக்கரேவின் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. இன்று (டிசம்பர் 24) உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் நேரில் சந்தித்து இதை அறிவித்துள்ளனர்.

20 ஆண்டு கால பகை முடிவு

20 ஆண்டுகால பகையை மறந்து சகோதரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தது மஹா அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் இருவரும் ஒன்றாக இணைந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக மஹாராஷ்டிராவில் மிகப்பெரிய பேரணியை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vadivelu
டிச 24, 2025 16:49

எப்படியோ ராகுலின் காங்கிரஸ் தனித்து விட பட்டு விடும். அவரும் 267 முறை வெளி நாடுகளுக்கு சென்று பல வியுகங்களை விலைக்கு வாங்கி, பல பட்டாசுகளை கொண்டு வந்து கொளுத்தி கொளுத்தி போட்டு எப்படியாவது பிரதமர் ஆக அயராது பாடு படுகிறார். பாவம் திரும்பி வரும்போது யாராவது ஒரு இடியை இறக்கி விடுகிறார்கள். சந்தடி சாக்கில் மச்சான் தன மனைவியை பிரதமர் ஆக்க முயல்கிறார்.


பாரதன்
டிச 24, 2025 16:00

தேச விரோத சக்திகள்


Iyer
டிச 24, 2025 15:56

0 + 0 = 0


vee srikanth
டிச 24, 2025 16:58

சஹி ஹை


புதிய வீடியோ