| ADDED : பிப் 09, 2024 07:36 AM
ஊர்க்காவல் படை எங்கே?ஊர்க்காவல் படை மூடி பல ஆண்டுகள் ஆனது. இது மறுபடியும் கோல்டன் சிட்டியில் இயங்க வேணும்னு பலரும் விரும்புறாங்க.ஊர்க்காவல் படை அலுவலகம் பறி போனதற்கும் கட்டடம் சிதிலமடைந்தது தான் காரணம் என்கிறாங்க. ஊர்க்காவல் படைக்கு ஒரு அலுவலகம் பழுது பார்த்து கொடுக்க கூட ம.அரசுக்கோ, மா.அரசுக்கோ மனசு வரவில்லை. இதை தட்டிக் கேட்க வேண்டிய செங்கோட்டைக்காரர், அசெம்பிளிக்காரர் கவனம் செலுத்தாதது என்ன காரணமோ.காக்கிகளுக்கு பெரும் துணையாக காவலுக்கு உள்ளவர்களாக ஊர்க்காவல் படையினர் தான். பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு ஒரு ஆபிஸ் இல்லாமல் ஆக்கிட்டாங்களே. யார் காவலுக்கும் தயாராக உள்ள ஊர்க்காவல் படையினருக்கு ஆபிஸ் ஏற்பாடு செய்வாங்களா.தாலுகா அலுவலகத்தில் இடம் இருக்குது. பழைய சானிடரி போர்டு அலுவலகம் வீணாக உள்ளது. ரா.பேட்டை அரசு பள்ளி கட்டடம் இருந்தும் பயனற்று உள்ளது. இதில் ஒன்றை ஊர்க்காவல் படைக்கு ஒதுக்கலாமே.ஏன் உடைந்தது?தனியார் நிர்வாக பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம் விரிசல் கண்டிருக்கு. இரண்டு கோஷ்டியாக பிரிஞ்சிடுச்சு.இரு தரப்பிலும் கூட்டம் போட்டு கலாய்க்கி றாங்க. மேலவை ஆசிரியர்கள் தொகுதியில் சிலர் கை பக்கம், மறு சைடு காவி பக்கம்.இந்த அரசியல் விளையாட்டில் ஆசிரியர்களின் ஓட்டு விவகாரத்தில், இவங்களும் ஓட்டு பேரத்தில் சங்கத்தை உடைந்திருப்பதாக பொதுவானவங்க பேசுறாங்களே.என்னதான் இருந்தாலும் தே.ஜ., கூட்டணிக்கு செல்வாக்கு கூடியிருக்காம். நாறும் கழிப்பறை ஊழல்!நகராட்சி எல்லையில் 35 வார்டுகளிலும் 50 ஹைடெக் கழிப்பறை கள் கட்டினாங்க. இதனால், திறந்த வெளியை பயன்படுத்தி வந்தவங்களுக்கு வசதி என நினைக்க முடிந்தது.ஒவ்வொரு கழிப்பறையும் பல லட்சம் செலவு செய்து கட்டினாங்களே தவிர, தண்ணீர் வசதியை செய்யலயே.இதுதானா துாய்மை இந்தியா திட்டம். பல கோடியை செலவழித்தவங்களுக்கு, இதன் பயன்பாடு பற்றி துளியும் அக்கறை இல்லாமல் போனதே.முன்பு, துாய்மை இந்தியா திட்டத்தில் வீடுதோறும் கழிவறைகள் கட்ட அரசு 15,000 ரூபாய் வழங்கியது. இதில் 60 சதவீதம் வீடுகளுக்கும் அந்த தொகை போய் சேரவே இல்லை. பொதுவாழ்க்கையில் நான் ரொம்போ நல்லவன்னு, தன்னை 'மிஸ்டர் கிளீன்' என்று சொல்லிக் கொள்பவரும் கூட இந்த கழிப்பறை ஊழலை கேட்கலையே.