தங்கவயல் நகராட்சி துணைத்தலைவர் 43 நாட்களுக்கு பின் பணி துவக்கம்
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி துணைத்தலைவர் ஜெர்மன் ஜூலியட், 43 நாட்களுக்கு பின்னர், தனது அலுவலகத்தில் பணியை துவக்கினார்.தங்கவயல் நகராட்சியின் புதிய தலைவராக இந்திராகாந்தி, துணைத்தலைவராக ஜெர்மன் ஜூலியட் ஆகியோர் ஆகஸ்ட் 22ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.துணைத்தலைவர் ஜெர்மன் ஜூலியட், 43 நாட்கள் கடந்த பின்னர், நேற்று முன் தினம், தன் பணியை துவக்கினார். தங்கவயல் கத்தோலிக்க கிறிஸ்தவ முதன்மை குரு ஜெரோம் தனிஸ்லாஸ் ஜெபம் செய்து ஆசிர்வதித்தார்.தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பங்கேற்கவில்லை. நகராட்சி ஆணையர் பவன் குமார் உட்பட அதிகாரிகள், பிளாக் காங்கிரஸ் தலைவர் மதலை முத்து, 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.துணைத்தலைவர் ஜெர்மன் கூறுகையில், ''அனைவரின் ஒத்துழைப்புடனும், ஆலோசனைகள் கேட்டும், ரூபகலா எம்.எல்.ஏ., உத்தரவின் பேரில் நகராட்சி தலைவர் இந்திரா காந்தியுடன் இணைந்து பணியாற்றுவேன்,'' என்றார்.குற்றம் காண்போர்தங்கவயலில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவற்றைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு, நகராட்சிக்கு உள்ளது. அனைத்து வார்டுகளையும் நேரில் பார்வையிட வேண்டும். குற்றம் கூறுவதே சிலரது வேலையாக உள்ளது. தேவையான இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. நகர மேம்பாட்டுக்குத் தேவையான நிதியை, எம்.எல்.ஏ., ரூபகலா, அரசிடம் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.ஜெயபால், கவுன்சிலர்சிறப்பான நகராட்சிநகராட்சித் தலைவர் இந்திரா காந்தி, துணைத் தலைவர் ஜெர்மன் ஆகியோர் இணைந்து 35 வார்டு களின் அடிப்படை வசதி களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும். தங்கவயல் சிறப்பான நகராட்சி என்கிற பெயரை பெற வேண்டும்.முனிசாமி, முன்னாள் தலைவர்நகராட்சி துணைத் தலைவர் ஜெர்மன் ஜூலியட் பணியை துவக்க, கத்தோலிக்க முதன்மை குரு ஜெரோம் தனிஸ்லாஸ் நேற்று முன்தினம் ஜெபம் செய்தார். உடன், நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, முன்னாள் தலைவர் முனிசாமி, கவுன்சிலர் ஜெயபால். இடம்: நகராட்சி அலுவலகம், தங்கவயல்.