உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14.57 கி.மீ., ரயில் சுரங்கப்பாதை பணியை வேகமாக முடித்து அசத்தல்

14.57 கி.மீ., ரயில் சுரங்கப்பாதை பணியை வேகமாக முடித்து அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தராகண்டின் தேவ்பிரயாக் - ஜனசு இடையே, நாட்டின் மிக நீளமான, 14.57 கி.மீ., நீளமுள்ள ரயில்வே சுரங்கப்பாதை, துளையிடும் இயந்திர ஆப்பரேட்டர்கள் இருவரின் விடாமுயற்சியால், திட்டமிட்ட காலத்துக்கு முன்னரே துளையிட்டு முடிக்கப்பட்டது. இமயமலையில் உத்தராகண்டின் ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவ்பிரயாக் - ஜன சு இடையே, 14.57 கி.மீ., நீளத்துக்கு இமயமலையை குடைந்து ரயில் சு ரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது, நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையாகும். அடுத்தாண்டு டிசம்பருக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது. தேவ்பிரயாக் - ஜனசு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, பிரபல கட்டுமான நிறுவனமான, 'லார்சன் அண்டு டூப்ரோ' மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திர ஆப்பரேட்டர்களான பல்ஜிந்தர் சிங், 44, ராம் அவ்தார் சிங் ராணா, 52, ஆகியோர், இரவு, பகலாக அயராது உழைத்து, திட்டமிட்ட காலத்துக்கு முன்னரே, 14.57 கி.மீ., நீளமுள்ள சுரங்கப்பாதையை துளையிட்டு பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இருவரும் ஒரு நாளைக்கு தலா 12 மணி நேரம் என, பகல் - இரவு ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்துள்ளனர். பணி அனுபவம் குறித்து, ஆப்பரேட்டர் பல்ஜிந்தர் சிங் கூறியதாவது: உண்மையிலேயே, இந்த பணி ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல இருந்தது. வழக்கமாக, 50,000 - 60,000 கிலோ நியூட்டன்கள் சக்தியில் துளையிடும் இயந்திரத்தை இயக்குவோம். ஒரு முறை, சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பெரிய பாறைகள் போன்றவை அடித்து வரப்பட்டு சிக்கல் ஏற்பட்டது. முழு ஆதரவு இவற்றை அகற்ற துளையிடும் இயந்திரத்தின் முழு சக்தியையும், அதாவது, -1.3 லட்சம் கிலோ நியூட்டன்கள் சக்தியில் இயக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு எங்கள் குழுவினரும் முழு ஆதரவு அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார். மற்றொரு ஆப்பரேட்டரான ராம் அவ்தார் சிங் ராணா கூறுகையில், ''நாங்கள், ஜெர்மனி நாட்டு தயாரிப்பான, 'சக்தி' என பெயரிடப்பட்ட துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தினோம். 10 நாட்கள் அந்த இயந்திரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி துளையிடும் பணியை முன்னதாகவே முடித்தோம். அந்த இயந்திரத்துக்கு ஓய்வே கொடுக்கவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
செப் 08, 2025 04:06

அம்பானியின் நிறுவனம்தான் இது என்பது ஒரு சிலருக்குத்தான் புரியும். மோடி வெறுப்பு கசாயம் குடிப்போர் இதை தெரிந்து கொள்ளவே மாட்டார்கள்.


Hari Ram
செப் 08, 2025 02:44

Salute to this unsung heros


Varadarajan Nagarajan
செப் 08, 2025 01:18

மிகவும் பாராட்டத்தக்கது. அநேகமாக நமதுநாட்டில் பெரும்பாலான பணிகள் குறித்தகாலத்தில் நிறைவேற்றப்படாமல் நேர மற்றும் பொருள் நஷ்ட்டம் ஏற்படுகின்றது. இதுபோன்ற ஒருசில பணிகள் அதுவும் சவாலான பணிகளை குறித்தகாலத்திற்கு முன்பே நிறைவேற்றி முடித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. எல் அண்ட் டி போன்ற பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற பணியை சிறப்பாக செய்தவர்களின் பெயரை வெளியிட்டு அவர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது


சமீபத்திய செய்தி