மேலும் செய்திகள்
ஆட்டோவில் 'வீலிங்' இளைஞர்களுக்கு வலை
28-Sep-2024
புதுடில்லி:ஷாஹ்தரா விஸ்வகர்மா நகரில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில், ராமர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.டில்லியைச் சேர்ந்த சுனில் கவுசிக்,56, நில புரோக்கராக இருந்தார். ஜெய் ஸ்ரீ ராம்லீலா கமிட்டி நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சுனில், 1987-ல் இருந்து ஆண்டுதோறும் நடக்கும் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடம் போட்டு நடிப்பார்.நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டும் ராம்லீலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு மேடையில், சீதாதேவி ஸ்வயம்வர காட்சியில் சுனில் ராமராக நடித்துக் கொண்டிருந்தார். வில்லை உடைத்தவாறே ஒரு பாடலைப் பாடும்போது சுனிலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக மேடைக்குப் பின்பக்கம் சென்று சரிந்து விழுந்தார்.அவரது மனைவி மற்றும் மகன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சுனிலை தூக்கிச் சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சுனிலுக்கு மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவிட் தடுப்பூசிக்குப் பின் இதுபோன்ற பல மரணங்கள் நாடு முழுதும் நிகழ்ந்துள்ளன. பல இளைஞர்கள் நடக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்,”என, கூறியுள்ளார்.
28-Sep-2024