உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!

அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

சுதேசி செயலியான அரட்டையில் ஆடியோ, வீடியோ கால் செய்யும் வசதி மற்ற சமூக வலைதளங்களை விட சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இது பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததாக சமூக வலைதளதங்கள் இருக்கிறது. அந்த சமூக வலைதளங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டினர் உருவாக்கியது தான். இதற்கு போட்டியாக தான் தற்போது 'ஸோகோ' நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்த, சுதேசி செயலியான அரட்டையின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நாளொன்றுக்கு சில ஆயிரம் புதிய பயனர்கள் சேர்ந்து கொண்டிருந்த 'அரட்டை' செயலியை, தற்போது தினமும் லட்சக்கணக்கான பேர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அந்த செயலியில் இடம் பெற்று இருக்கும் பிரத்யேக வசதிகள் தான். இந்த செயலி, வாட்ஸ்அப், டெலிகிராமுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடியது. அவற்றில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன; அவற்றில் இல்லாத அம்சங்களும் இதில் உள்ளன. குறைந்த இணைய வேகம் இருக்கும் இடத்திலும், அரட்டை செயலி வேலை செய்யும். சாதாரண ஸ்மார்ட் போனில் கூட பயன்படுத்த முடியும். ஆன்ட்ராய்டு டிவியிலும் இதை பயன்படுத்த முடியும். இவ்வாறு பிரத்யேக வசதிகளை சொல்லி கொண்டே போகலாம்.தற்போது அரட்டை செயலியின் புதிய பயனர்கள் தங்களுக்கு கிடைத்த பலன்களை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, அரட்டை செயலியில் இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதிகள் வாட்ஸ் அப்பில் இருப்பதை காட்டிலும் சிறப்பாக இருப்பதாக அதை உபயோகப்படுத்திய பயனர்கள் கூறுகின்றனர்.ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி, வாட்ஸ் அப் போன்று தாமதம் ஏற்படுவதில்லை. சாதாரண வாய்ஸ் கால் பேசுவது போன்றே இருப்பது மிகுந்த வரவேற்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !