உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் மோதல் முற்றுகிறது: காங்.,கிற்கு எதிராக ஆம் ஆத்மி போர்க்கொடி

டில்லியில் மோதல் முற்றுகிறது: காங்.,கிற்கு எதிராக ஆம் ஆத்மி போர்க்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரசில் இருந்து அஜய் மக்கனை நீக்க வேண்டும். அல்லது அக்கட்சியை இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேற்ற வலியுறுத்துவோம் என ஆம் ஆத்மி கூறியுள்ளது.டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட உள்ளன. இதற்காக வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று டில்லியில் நிருபர்களைச் சந்தித்த காங்கிரசின் அஜய் மக்கன், ஆம் ஆத்மி அரசின் தோல்விகள் குறித்து பட்டியல் வெளியிட்டு, கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து பேசினார். இது ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இடையே கோபத்தை கிளப்பி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mx98xld2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: டில்லியில் பா.ஜ.,விற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளது. அக்கட்சி பலன் அடையும் வகையில் காங்.,கின் செயல்பாடுகள் உள்ளன. பா.ஜ., தயாரித்து கொடுத்த அறிக்கையை அஜய் மக்கன் படிக்கிறார். அவர்கள் கூறியபடிபேசுகிறார். கெஜ்ரிவாலை தேச விரோதி எனக்கூறி அனைத்து எல்லைகளையும் அவர் கடந்துவிட்டார். எந்த பா.ஜ., தலைவரையாவது அவர் தேச விரோதி எனக்கூறியுள்ளாரா?ஹரியானா மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பினோம். ஆனால், அது நடக்காததால் தனித்து போட்டியிட்டோம். தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அநாகரீகமான எந்த வார்த்தையையும் நாங்கள் கூறவில்லை. ஆனால், காங்கிரஸ் பட்டியலை பார்த்தால், அது பா.ஜ., தயாரித்து கொடுத்தது போல் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அஜய் மக்கனை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அது நடக்காத பட்சத்தில் , ' இண்டியா' கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றுவோம் என நாங்கள் மற்ற கட்சிகளை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.டில்லி முதல்வர் அதிஷி கூறியதாவது: டில்லி தேர்தலுக்காக பா.ஜ., உடன் ஒப்பந்தம் போட்டது போல் காங்கிரசின் செயல்பாடுகள் உள்ளன. கெஜ்ரிவாலை தேச விரோதி என அஜய் மக்கன் கூறுகிறார். இதே போன்ற குற்றச்சாட்டை எந்த பா.ஜ., தலைவருக்கும் எதிராகவும் காங்கிரஸ் கூறியது கிடையாது. ஆனால், கெஜ்ரிவாலை அப்படி விமர்சிக்கிறது. கெஜ்ரிவால் மற்றும் எனக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளிக்கிறது. எந்த பா.ஜ., தலைவருக்கு எதிராகவும் அக்கட்சி புகார் கொடுத்து உள்ளதா? காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆகும் செலவு பா.ஜ.,விடம் இருந்து வருகிறது என்ற நம்பகத்தகுந்த தகவல்கள் எங்களுக்கு வருகிறது. காங்கிரசுக்கு ஆகும் செல்வை பா.ஜ., தான் செய்கிறது. சந்தீப் தீக்ஷித்திற்கு பா.ஜ., நிதியுதவி செய்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம். நாங்கள் தேச விரோதிகள் என்றால், லோக்சபா தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்தது ஏன்தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரஸ் பா.ஜ., இடையே பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பா.ஜ., வெற்றி பெற உதவி செய்வது என அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.இரு கட்சிகளுக்கு இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை என்றால், அஜய் மக்கனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAAJ68
டிச 26, 2024 23:53

காலச்சக்கரம் சுழல்கிறது.... பாஜகவின் வெற்றி உறுதி


திகழ் ஓவியன், Ontario
டிச 26, 2024 19:38

கதறல் பத்தாது இனமும் இன்னும்...கேஜரிவால் ஒரு tanker jelusil பார்சல்...


Kumar Kumzi
டிச 26, 2024 22:59

மதம் மாறிய கொத்தடிமையின் கூக்குரல் புரியுது


M S RAGHUNATHAN
டிச 26, 2024 19:27

இந்த அஜய் மக்கன் தந்தை லலித் மக்கான் 1984 சீக்கிய கலவரத்தில் காங்கிரஸ் சார்பாக குற்றங்கள் புரிந்தவர். லலித் முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் ஷர்மாவின் மருமகன்.


SP
டிச 26, 2024 18:15

டில்லிக்கு தனியாக சட்டமன்றம் தேவையே இல்லை.


ஆனந்த்
டிச 26, 2024 17:29

சண்டைப் போட்டு என்ன ஆகப் போகிறது


Duruvesan
டிச 26, 2024 17:11

அஜய் மக்கான் காங்கிரஸ் கட்சியில் ஓரம் கட்ட படுவார், கட்சி எங்கயும் டெபாசிட் வாங்காது. ராவுள் கட்சியை அழிக்காமல் விட மாட்டார்,


Kumar Kumzi
டிச 26, 2024 17:02

யார் பெரிய பொய்யன் யார் பெரிய திருடன் என்றே முரட்டு மோதல் ஆம் ஆத்மீ கொங்கிரெஸ் இடையே ஆரம்பித்துவிட்டது சபாஷ்


முக்கிய வீடியோ