உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சப் - இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற கான்ஸ்டபிள்

சப் - இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற கான்ஸ்டபிள்

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜிரிபம் மாவட்டத்தின் மோங்பங் கிராமத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் விக்ரம்ஜித் சிங் என்பவர் கான்ஸ்டபிளாக இருந்தார். இங்கு, சப் - இன்ஸ்பெக்டர் ஷாஜஹானுக்கும், விக்ரம்ஜித் சிங்குடன் மோதல் போக்கு நிலவியது. நேற்று முன்தினம், பணியில் இருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது, விக்ரம்ஜித் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாஜஹானை நோக்கி சுட்டதில், அவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த மற்ற போலீசார், சப் - இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கான்ஸ்டபிள் விக்ரம்ஜித் சிங்கை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ