உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது அருந்தியதை கண்டறிவதற்கான பிரீத் அனலைசர் சோதனை செல்லாது: கோர்ட்

மது அருந்தியதை கண்டறிவதற்கான பிரீத் அனலைசர் சோதனை செல்லாது: கோர்ட்

பாட்னா :'ஒருவர் மதுஅருந்தியதை கண்டறிய, 'பிரீத் - அனலைசர்' சோதனை மட்டும் போதுமானது கிடையாது' என, பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்குப்பதிவு

பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.அங்கு, மது விலக்கு அமலில் உள்ளது. சாலைகளில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோரை பிடிக்க, 'பிரீத் அனலைசர்' எனப்படும் சுவாச சோதனை கருவியை போலீசார் பயன்படுத்துகின்றனர்.கடந்த ஆண்டு மே 2-ல், நரேந்திர குமார் ராம் என்பவரிடம் இதுபோல சோதனை நடத்தி, அவர் மது அருந்தியதாக பீஹார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்தாண்டு ஏப்., 16ல் வயிற்று வலிக்காக ஹோமியோபதி மருந்தை எடுத்துக் கொண்டேன். ஆல்ஹகால் அடிப்படையிலான மருந்து என்பதால் என் சுவாசத்தில் மது வாடை வந்திருக்கலாம். அதை வைத்து, நான் மது அருந்தி யதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,” என குறிப்பிட்டார்.

சுவாச சோதனை

மனுவை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்ற அமர்வு கூறியதாவது:ஒருவர் மது அருந்தினார் என்பதை நிரூபிக்க, 'பிரீத் அனலைசர்' சோதனை அறிக்கை மட்டுமே போதுமானது கிடையாது. அதை உறுதியான ஆதார மாக எடுத்துக்கொள்ள முடியாது. சுவாசத்தில் மது வாடை, குளறல் பேச்சு, தள்ளாட்டம் போன்றவை மட்டுமே ஒருவர் மது அருந்தியதற்கான ஆதாரங்களாக கருத முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கில் போலீஸ் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில், பிரீத் அனலைசர் வாயிலாக சுவாச சோதனையில் 100 மில்லிக்கு, 41 மி.கி., வீதத்தில் மது இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதைத் தவிர, வேறு எந்தவிதமான பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
பிப் 21, 2025 11:02

HOMEO மருந்துகளில் ஒரு சதவீதம் அல்லது அதற்குக் குறைவாகவே ஆல்கஹால் இருக்கும். அந்த அளவை பிரீத் அனலைசரால் கண்டுபிடிக்க முடியாது. இந்த குடி பார்ட்டி போலீஸ ஏமாற்ற பொய் சொல்லுது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 21, 2025 10:46

இந்த பீரீத் அனலைசர் என்னும் கையடக்க கருவி வருவதற்கு முன்பு வாகன சோதனையின் பிடிக்க பட்ட வாகனங்கள் அங்காங்கே சாலையின் ஓரமாக நிறுத்தி பூட்டி விட்டு அந்த அந்த வாகன ஓட்டிகள் அனைவரையும் ஒரு வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரத்த பரிசோதனை செய்வார்கள். அரசு மருத்துவ மனையில் இரத்த பரிசோதனை உண்மையிலேயே நடக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. இதற்கு நடுவே பிடித்த காவல் துறை அதிகாரியிடமே அதாவது சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழுவது மேல் என்னும் பழமொழிக்கு ஏற்ப பிடித்த காவல் துறை அதிகாரியின் கையில் கவனித்து காலில் விழுந்தால் உண்மையாகவே குடித்திருந்தாலும் குடிக்கவில்லை என்று இரத்த பரிசோதனை அறிக்கை வரும். வெகுளியாக நாம் குடிக்கவில்லையே என்று உண்மையாக இருந்து அடி பணியா விட்டால் இரத்த பரிசோதனை அறிக்கையில் குடித்திருக்கிறார் என்று வரும். எல்லாம் அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கும் காவல் துறை அதிகாரிகள் இடையே உள்ள இரகசியம். மொபைல் போன் போன்ற தொலை தொடர்பு சாதனங்கள் இல்லாத போதும் பிடிபட்ட காவல் துறை அதிகாரி கூடவே இருந்தாலும் இது நடக்கும். அது எப்படி என்று இன்று வரை புரியவில்லை.


angbu ganesh
பிப் 21, 2025 10:26

இவர்களே குண்டு வைப்பாங்களாம் இவர்களே எடுப்பாங்களாம் சாரி தமிழ் நாட்ட சொன்னேன்


GMM
பிப் 21, 2025 08:35

சுவாச சோதனை அறிவியல் முறை. அப்படி என்றால், வேறு எந்த முறையை நீதிமன்றம் ஏற்கும்.? சட்ட விதியை திருத்தாமல், இஷ்டம் போல் வாதிட , தீர்ப்பளிக்க முடியாது. ஹோமோயோபதி மருந்து சாப்பிட்டதை யார் உறுதி செய்தார். ? போதை தரும் மருந்து சாப்பிட்டால் வீரியம் குறையும் வரை ஓய்வு எடுக்க வேண்டும். அரசு பணியை நீதிமன்றம் மதிப்பது இல்லை. ஏன். ?


பீம்யாதவ்
பிப் 21, 2025 06:14

பிஹார் மக்களே... மதுவிலக்கு பத்தி கவலை வாணாம். கள்ளச்சாராயம் வாணாம். ஓமியோபதி மருந்து சாப்புடுங்க. கிக் செம. ஜஜ்ஜுங்களும் கண்டுக்க மாட்டாங்க.


அப்பாவி
பிப் 21, 2025 06:12

ஹோமியோபதி மருந்தில் ஆல்கஹால் இருக்குன்னு தெரிஞ்சும் அதைக் குடிச்சிட்டு கார் ஓட்டுன தத்தியை விடுவிக்கும் தத்தி நீதிமன்றம். பிஹார்னாலே அப்பிடித்தான் இருக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 21, 2025 01:07

நீதிபதி ஃபுல் மப்பில் இதை எழுதியிருக்கலாம்.


புதிய வீடியோ