உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் பதவிக்கு தடை கோரிய மனு: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்

ராகுலின் பதவிக்கு தடை கோரிய மனு: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்

புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, லோக்சபா எம்.பி., பதவி மீண்டும் வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி சமூகத்தினர் குறித்து அவதுாறாக பேசியதாக, காங்., - எம்.பி., ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தகுதி நீக்கம்

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், ராகுலுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தங்களது பதவியை இழப்பர். அந்த வகையில், எம்.பி., பதவியில் இருந்து ராகுலை தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் உத்தரவிட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆக., 4ம் தேதி, ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, ஆக., 7ம் தேதி, ராகுலுக்கு மீண்டும் எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளதாக லோக்சபா செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. இதை ரத்து செய்யக் கோரி, உ.பி.,யின் லக்னோவைச் சேர்ந்த அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நேரம் வீணடிப்பு

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, 'இது போன்ற அற்பமான மனுக்களை தாக்கல் செய்வது, நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறது. 'இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என தெரிவித்தது. இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டில், அசோக் பாண்டே தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அபராதமும் விதித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

abdulrahim
ஜன 20, 2024 17:44

குஜராத் நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய இரண்டு தீர்ப்புகளையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் செவிட்டில் அடித்து விட்டது


RAMAKRISHNAN NATESAN
ஜன 20, 2024 20:41

அட ...... காபிர்களின் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டதா ????


sahayadhas
ஜன 20, 2024 15:03

பல சட்டம் தீர்ப்பு இருப்பதால்தான் இந்தியா ஒன்றியம் என்று பெயர் இட்டுள்ளது


seshadri
ஜன 20, 2024 11:36

அது சரி ஐந்து மாதங்களாக அந்த வழக்கில் ஒன்றும் நடவடிக்கை இல்லையா இனிமேல் தீர்ப்பு வந்து என்ன வராமல் போனால் என்ன. இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. இவர் அடுத்த தேர்தலில் நின்று ஜெயித்து விடுவார். இந்த தீர்ப்பினால் என்ன பயன். பணம் பதவி இருந்தால் நீதிமன்றங்களும் வணங்கி வழி விடும். பணம் இல்லாதவர்களிடம் பாய்ந்து பிடுங்கி குதறிவிடும்.


குமரன்
ஜன 20, 2024 08:30

ஐயா நீதிபதி அவர்களே இருப்பவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி.... ஆனால் தர்மத்திற்கு ஒரே நீதி என்பதையும் அறிவீர்களா


Anantharaman
ஜன 20, 2024 08:14

தடை விதித்து ஓராண்டுக்கு மேலாகியும் உச்ச நீதி மன்றம் வழக்கை ஏன் முடிக்கத் தயக்கம்? இவர்களுக்கு யார் தண்டனை தருவார்?


Kasimani Baskaran
ஜன 20, 2024 07:56

ஜெயிப்பதை மிக மிக எளிதாக்குகிறார் என்றால் சும்மா விட வேண்டியதுதானே என்ற ஆதங்கத்தில் இந்த அபதாரம்.


raja
ஜன 20, 2024 06:10

அய்யா நீதிபதிகளே எது அர்ப்பதனம்... இதே ஒரு சாமானியன் வாய்க்கு வந்ததை பேசினால் இதே கோர்ட் சும்மா இருக்குமா...சமூக வலைதளத்தில் கருத்து கூறினாலே குண்டாசில் தள்ளும் திராவிட விடியா அரசுக்கும் இது ஏன் பொருந்த வில்லை....


Ramesh Sargam
ஜன 20, 2024 00:49

சூரத் நீதிமன்றம் மற்றும் குஜராத் நீதிமன்றம் ஒரே மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு எதிர்மறையான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. எனக்கு இங்கே ஒரு சந்தேகம் - சூரத் நீதிமன்றம் நீதிபதிகள், குஜராத் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்கள் லா law, சட்டம் படித்தபோது ஒரேமாதிரியான சட்டம்தான் படித்திருப்பார்கள் என கருதுகிறேன். ஆனால் தீர்ப்பு வெவேறு விதமாக ஏன் வழங்குகிறார்கள்?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ