உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்குவரத்து போலீசை காரில் இழுத்து சென்ற டிரைவர்

போக்குவரத்து போலீசை காரில் இழுத்து சென்ற டிரைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஷிவமொக்கா : கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா நகரின் சகயாத்ரி கல்லுாரி எதிரே சமீபத்தில் போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பத்ராவதி பகுதியிலிருந்து வந்த ஒரு காரை ஓரமாக நிறுத்தும்படி போலீஸ்காரர் ஒருவர் சைகை காட்டினார். ஆனால், அதை கார் டிரைவர் மதிக்காமல் முன்னேறி செல்ல முயன்றார்.அவரை தடுப்பதற்காக காரின் முன்னே வந்து நின்ற போலீஸ்காரர், மீண்டும் ஓரம் கட்டும்படி கூறினார். ஆனாலும் தொடர்ந்து காரை முன்னால் நகர்த்தியபடி இருந்தார் டிரைவர். ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் மீது காரை மோதினார். தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீஸ்காரர், காரின் பானெட் மீது தாவி ஏறினார். அப்போதும் காரை நிறுத்தாமல் 100 மீட்டர் துாரத்திற்கு போலீஸ்காரரை இழுத்துச் சென்று கீழே தள்ளிவிட்டு, கார் டிரைவர் தப்பிச் சென்றார். கார் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் மிதுன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
அக் 26, 2024 17:02

நிச்சயமாக பாஜக ஆதரவாளராகத் தான் இருப்பார்!


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 26, 2024 09:51

மக்களுக்கு போலீஸ் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் மீது மதிப்பு மரியாதையை எங்கயோ போயிட்டு . யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்கிற மனதளவில் மக்கள் வந்துவிட்டனர். இதுக்கு அரசும் காரணமே. கொடுக்கிற தண்டனை கடுமையாக இல்லையெனில் மக்களும்...இப்படி நடந்துகொள்ள வாய்ப்பு அதிகம் .


Ganesun Iyer
அக் 26, 2024 08:18

இழத்தெல்லாம் போகல, லிப்ட் கேட்டாரு உள்ள இடமில்லை அதனால் பானட் மேல ஏத்தி போலிஸ்காரர் எங்க இருக்குனுமோ அங்க இறக்கி உண்டாரு. இது வீடியோ "டெக்னிகல் மிஸ்டேக்".. "யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்".


Kasimani Baskaran
அக் 26, 2024 07:08

வசூல் செய்ய ஓரங்கட்டினால் எப்படி நிற்பார்கள். சிங்கப்பூர் போல காவலர்களுக்கு காமிரா கொடுத்து அதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை