மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
2 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
2 hour(s) ago
புதுடில்லி, நம் அண்டை நாடான மியான்மரின் எல்லைப் பகுதி, நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகியவற்றை ஒட்டி உள்ளது. இதன் துாரம் மொத்தம் 1,643 கி.மீ., எல்லையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் 16 கி.மீ., வரை தடையின்றி, விசா இல்லாமல் சென்று வரலாம். இதனால், மியான்மரில் இருந்து ஏராளமான பழங்குடியின போராளிகள் குழுவினரும், அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் காரணமாக மியான்மர் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் அடிக்கடி இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:மியான்மரிலிருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில், அந்நாட்டின் எல்லைப்பகுதி அமைந்துள்ள 1,643 கி.மீ., முழுதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கி.மீ., நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி முழுதும் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் ரோந்து பாதையும் அமைக்கப்படுகிறது. வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, பாதுகாப்பின்மை மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மியான்மர் நாட்டின் ராக்கைன் பகுதிக்கு செல்ல வேண்டாம் என, இந்தியர்களை நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது. அங்கு சென்றுள்ள இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago