உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரும்பு கேட் விழுந்து இறந்த சிறுவனின் கண்கள் தானம்

இரும்பு கேட் விழுந்து இறந்த சிறுவனின் கண்கள் தானம்

மல்லேஸ்வரம்: மாநகராட்சி மைதான இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த 10 வயது சிறுவனின் கண்களை, பெற்றோர் தானம் செய்தனர்.பெங்களூரு மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த விஜயகுமார் - பிரியா தம்பதி மகன் நிரஞ்சன், 10. நேற்று முன்தினம் தனது சைக்கிளுக்கு செயினை மாட்ட நண்பர்களுடன் சென்றார்.சைக்கிள் செயின் மாட்டிய பின், மாநகராட்சி மைதானத்துக்கு சென்றனர். மைதானத்தின் இரும்பு கேட் நுழைவு வாயிலை பிடித்து இழுத்தபோது, மாணவன் மீது விழுந்தது.முகம், தலையில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், நிரஞ்சனை, மல்லேஸ்வரம் கே.சி., ஜெனரல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நேற்று விக்டோரியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், நிரஞ்சன் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.நிரஞ்சனின் தந்தை விஜயகுமார் கூறுகையில், ''என் மகனை தான் காப்பாற்ற முடியவில்லை. பார்வை இல்லாத குழந்தைகளுக்கு பார்வை கிடைக்க, என் மகனின் கண்களை தானம் செய்துள்ளேன். என் மகனின் இறப்பு, எனக்கும், எனது குடும்பத்துக்கும் வேதனையை அளித்துள்ளது,'' என்றார்.நேற்று மாணவரின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் தினேஷ் குண்டுராவ், “அரசு, பெங்களூரு மாநகராட்சி, காந்தி நகர் பிளாக் காங்கிரஸ் சார்பில் நிவாரணம் பெற்றுத்தரப்படும்,” என உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ