உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலோயர் 56 லட்சம் பேர்; ஓட்டு போட்டது வெறும் 155 பேர்; எல்லாமே பொய்யா கோப்பால்?

பாலோயர் 56 லட்சம் பேர்; ஓட்டு போட்டது வெறும் 155 பேர்; எல்லாமே பொய்யா கோப்பால்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர் அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுக்களே வாங்கி தோல்வியடைந்தார். மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி 221 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இண்டியா கூட்டணி வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.இது ஒருபுறம் இருந்தாலும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான அஜாஸ் கான், ஆஸாத் சமாஜ் கட்சியின் சார்பில் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்டார். 16 பேர் போட்டியிட்ட இந்தத் தொகுதியில், அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகளே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் வேட்பாளர் ஹரூன் கான் 65,396 ஓட்டுகளை பெற்று, 1600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.வைச் சேர்ந்த பாரதி லவேகர் 63,796 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். நோட்டாவுக்கு 1,298 ஓட்டுக்கள் விழுந்துள்ளன. இது அஜாஸ் கான் வாங்கிய ஓட்டுக்களை விட 6 மடங்கு அதிகமாகும். இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பாலோயர்களைக் கொண்டுள்ள அஜாஸ் கான், அது அனைத்தும் ஓட்டுக்களாக மாறும் என்று நம்பி ஏமாந்து விட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anantharaman Srinivasan
நவ 23, 2024 20:45

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா..? நடிகன் Famous என்றால் ஓட்டுக்கள் விழுந்திடுமா..?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 23, 2024 20:35

ஜெயிச்ச மூர்க்கனுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கணும், அதுக்காக ஓட்டைப்பிரிக்கணும் ன்னு நினைச்சிருக்கார் ... இவர் உதவியில்லாமலேயே அவர் ஜெயிச்சுட்டான் ....


Ramesh Sargam
நவ 23, 2024 20:27

அமிதாப் பச்சன் தேர்தலில் நின்றாலும் இதே கதைதான், இதே கதிதான்.


ديفيد رافائيل
நவ 23, 2024 19:34

Same TVK நிலைமையும் இதே தான். அரசியல் சம்பந்தப்பட்ட படத்துல நடித்து அந்த படம் பிரபலமாகிடுச்சுன்னு நம்பி TVK கட்சி ஆரம்பிச்சாச்சு அவ்வளவு தான். This is reality.


rama adhavan
நவ 23, 2024 19:26

ரீல் புகழ் ரியல் புகழ் அல்ல. எனவே அரசியலில் வெற்றி பெற முடியாது. இவர் ஒரு மன்சூர் அலி போல் கட்சியை முடக்கி விடுவார். இதை தெரிந்து ரஜினி அரசியலுக்கு வரவில்லை. கமல் வந்து தோற்று திமுக என்னும் மண் குதிரை காப்பாற்றும் என நம்பிக்கை கொண்டுள்ளர். விஜய் இனிமேல் தான் அரசியல் பாடம் படிக்க வேண்டும்.


சம்பா
நவ 23, 2024 19:09

இங்கும் அப்படிதான் வரும்


Kalyanaraman
நவ 23, 2024 19:02

இந்தச் செய்தியை நடிகர் ஜோஸப் விஜய் படித்திருப்பாரா?


Kalyanaraman
நவ 23, 2024 19:01

இன்ஸ்டாகிராமில் 56 லட்சத்தில் அஜாஸ் கானின் பெரும்பாலான பாலோயர்கள் பாகிஸ்தானியர்களோ?


Mathan
நவ 23, 2024 18:31

What will happen to our state Actors?


SUBBU,MADURAI
நவ 23, 2024 19:05

The same thing happen...


BHARATH
நவ 23, 2024 18:25

மராட்டி ஜோசப் விஜய்


முக்கிய வீடியோ