உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

ராஞ்சி: 'நாட்டிற்கு சேவை செய்வதற்கான முதல் படி ஓட்டுப்போடுவது தான்,' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இன்று ராஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை மட்டுமல்ல, நாட்டிற்கு சேவை செய்வதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படி,தேர்தல் நடைபெறும் போதெல்லாம் தகுதியுள்ள குடிமக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.தேசத்திற்கு சேவை செய்வதற்கான முதல் படி வாக்களிப்பது. வாக்களிக்க, வாக்காளர் பட்டியலில் சேருவதன் மூலம் வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும். 18 வயது நிரம்பிய எந்தவொரு தகுதியுள்ள இந்திய குடிமகனும் விடுபடக்கூடாது.தேர்தல் ஆணையம் எப்போதும் வாக்காளர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது, தொடர்ந்து அதைச் செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sundar R
ஏப் 13, 2025 19:48

பணிவான ஆலோசனை இந்தியாவில் தேர்தல் ஆணையத்தில் தினசரி அடிப்படையில் REFORMS மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பாரதம் சுதந்திர அடைந்த புதிதில் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஏராளமான அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். அதன்பிறகு, அயோக்கியர்கள் உள்ளே நுழைந்து விட்டார்கள். 40-50 ஆண்டுகளுக்கு முன்பு அயோக்கியர்களாக இருந்த அரசியல்வாதிகள் பிடிபட்டாலும் கூட எந்த அரசியல்வாதியும் தண்டிக்கப்படவில்லை. இப்போது, அரசியல்வாதிகளில் அயோக்கியர்கள் மட்டுமே புகழ்மிக்க வாழ்வு வாழ்கிறார்கள். இப்போதும் கூட , குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள், அதன் பிறகு மீண்டும் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் அதே பதவியை அடைய அனுமதிக்கப்படுகிறார்கள். அதே குற்றவாளிகள் அனைவரும் , அதன்பிறகு நடத்தப்படும் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையத்தில் தினசரி அடிப்படையில் REFORMS மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை, அனைவரின் தேர்விலும் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம், குற்றவாளிகள், வாரிசு வம்சாவளி அரசியல், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் proxies தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தான் தடைசெய்ய வேண்டும். பண விஷயத்தில் நம்பகத்தன்மை இல்லாத அரசியல்வாதிகள் இருந்தால், அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் – இது தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான REFORM மாற்றமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அரசியல் கட்சி, தனது 5 வருட ஆட்சியத்தின் போது தேர்தல் அறிக்கையில் அவர்கள் கூறிய‌தை முழுவதும் செயல்படுத்தவில்லை என்றால், அந்தக் கட்சியின் அனைத்து சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிடத் தடை செய்ய வேண்டும். ஆனால், அதே கட்சியில் இருக்கக்கூடிய மற்ற அரசியல்வாதிகள் போட்டியிடலாம். இது போன்ற செயல்களால் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றும் திமுகவினரை அடியோடு ஒழிக்க இந்த REFORMS மாற்றங்கள் வழிவகை செய்யும். பிற கட்சிகளுக்கும் இது பாடமாக இருக்கும். திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தது, ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 10 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. இன்னும் ஒரு வருடமே மீதமுள்ளது 2026-ல் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது, திருட்டு திமுகவினர் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. தேர்தல் ஆணையம் இந்த ஏமாற்று வேலையை கவனித்து 2026 தேர்தலிலும் திமுக இந்த ஃபிராடு வேலை செய்வதைத் தடுக்க வேண்டும். மேலும் பல முக்கியமான அம்சங்களை அவ்வப்போது மாறும் காலத்திற்கேற்ப புதிது புதிதாக செய்யலாம். கிரிக்கெட் விளையாட்டில் விதிகள் சில மில்லி விநாடிகளில் மாறிக் கொண்டே இருக்கின்றன, இது விளையாட்டின் தரத்தை உயர்த்துகிறது, தவறுகளை குறைக்கிறது, மற்றும் நடுவர்களுக்கு முடிவுகளை எளிதாகவும் சரியானதாகவும் எடுக்க உதவுகிறது. இதுபோல் தேர்தல் ஆணையமும் அன்றாடம் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். யாராவது இதைப் பற்றிய தகவலை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய பாரதத்தை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நிரந்தரமாக குடியிருக்கும் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். தவறான எம்.எல்.ஏ., எம்.பி.களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் நல்லவர்கள் இருந்தால், நாடு விரைவாக வளர்ச்சி அடையும். அங்கு சண்டைகள், கூப்பாடுகள், கூச்சல்கள் மற்றும் அடிக்கடி நிகழக்கூடிய ஒத்திவைப்புகளும் இருக்காது. பாராளுமன்றத்திலிருந்தும், சட்டசபையிலிருந்தும் கிரிமினல் குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்க அனுமதியோம்.


தமிழ்வேள்
ஏப் 13, 2025 18:26

முதலில் ஆதார் அட்டையை ஓட்டர் ஐ.டி ரோடு இணையுங்கள்...ஆதார் அடிப்படையில் 18 வயது ஆனால் வாக்காளர்..இறந்தால் ஆதார் ரத்து ஆகும் போது ஓட்டர் ஐ.டி ரத்து ஆட்டோமேட்டிக் ஆக இருக்க வேண்டும்..ஆதார் அட்டையில் உள்ள முகவரியின் தொகுதியே வாக்காளர் தொகுதி..தேர்தல் பயோமெட்ரிக் அடிப்படையில் நடத்துங்கள்.. வாக்களிக்காதவர்களின் ரேஷன் அட்டை டிரைவிங் லைசென்ஸ் ஐ குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முடக்குங்கள். வாக்குப்பதிவு அதிகரிக்கும்.. கள்ள ஓட்டு காலாவதியாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை