உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர் காலமானார்

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர் காலமானார்

அயோத்தி :உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவரான, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி காமேஷ்வர் சவுபால், 68, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, உலகம் முழுதும் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.ராமர் கோவில் உருவாக முக்கியமானவர்களில், ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவரான, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த காமேஷ்வர் சவுபாலும் ஒருவர். கடந்த, 1989ல் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டபோது, முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். டில்லியில் உள்ள சார் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இவர் காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அன்பே சிவம்
பிப் 08, 2025 19:50

ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...


Balaji Radhakrishnan
பிப் 08, 2025 15:01

இவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.


Karthik
பிப் 08, 2025 14:02

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.


Subramanian
பிப் 08, 2025 08:06

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Kasimani Baskaran
பிப் 08, 2025 07:52

பகவான் ராமனின் அருள் இவருக்கு என்றும் உண்டு. நிச்சயம் முக்தியே கிடைக்கும்.


Dwarakanath Putti
பிப் 08, 2025 06:52

இறைவன் அவருக்கு இட்ட பணியை கடமையை நிறைவேற்றி இருக்கிறார் . அவரோட பிறப்புக்கு பெருமை சேர்த்து இருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.


Oviya Vijay
பிப் 08, 2025 05:51

அயோத்தியில் உங்களால் உருவாக்கப்பட்ட கடவுள் கூட உங்களை நெடுங்காலம் வாழ வைக்கவில்லையா???


Kasimani Baskaran
பிப் 08, 2025 07:51

பயித்தியக்காரத்தனமான, முதிர்ச்சியற்ற கருத்து.


Rasheel
பிப் 08, 2025 12:05

ஊமை பேசுகிறான், குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான் என்று நாங்கள் போதிப்பதில்லை. அப்படி இருந்தால் ஆஸ்பத்திரி எதற்கு


J.V. Iyer
பிப் 08, 2025 04:36

இவர் ஆன்மா இறைவனடி சேர வேண்டுகிறோம்.


முக்கிய வீடியோ