உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் விசாரணை... சூடுபிடித்தது! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது சி.பி.ஐ.,

பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் விசாரணை... சூடுபிடித்தது! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது சி.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி :மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை சூடுபிடித்துள்ளது. பலாத்காரம் நடந்த மருத்துவனை கருத்தரங்க கூடத்தின் தாழ்ப்பாள் உடைந்திருந்தது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ., அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் டாக்டரின் உடல், கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், அங்குள்ள போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். கேள்விஇந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் கருத்தரங்கக் கூடத்தின் கதவின் தாழ்ப்பாள் உடைந்திருந்தது குறித்து அவர்கள் நேற்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து சி.பி.ஐ., மூத்த அதிகாரி கூறியதாவது:

பலாத்கார சம்பவத்தை முன்னரே திட்டமிட்டு நிறைவேற்றும் நோக்கத்தில், கருத்தரங்கக் கூடத்தின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டதா? ஏற்கனவே இந்த கதவின் தாழ்ப்பாள் உடைந்திருந்ததாக சக டாக்டர்கள் கூறியுள்ள நிலையில், பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது, அறையின் வாசலில் காவலுக்கு வேறு யாராவது நிற்க வைக்கப்பட்டார்களா? அப்படியானால், இந்த சம்பவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனரா? கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் வெளியில் கேட்காதது ஏன்? இதுபோன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதால், மருத்துவமனையில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, அங்குள்ள டாக்டர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு

இதற்கிடையே, பயிற்சி டாக்டர்களின் தொடர் போராட்டங்களால் மேற்கு வங்கத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் கடுமையாக நேற்றும் பாதிக்கப்பட்டன.கடந்த 15 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தைத் தொடர்ந்து அவசர சிகிச்சை உட்பட பல்வேறு பிரிவுகளில் சீனியர் டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காமல் பணிக்கு திரும்பப் போவதில்லை என பயிற்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மை கண்டறியும் சோதனை

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அவரிடம் 88 மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், திருப்தியளிக்கும் விதமாக எந்த பதிலும் கிடைக்காத நிலையில், அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இறந்த பெண் டாக்டர் பணியில் இருந்தபோது, அவருடன் பணியாற்றிய நான்கு டாக்டர்களுக்கும் இந்த பரிசோதனை நடத்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பணிக்காலத்தில் நிதி முறைகேடுகளில் சந்தீப் கோஷ் ஈடுபட்டது தொடர்பாக மாநில புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், அது சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று உத்தரவு பிறப்பித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், விசாரணை தொடர்பான முதற்கட்ட அறிக்கையை மூன்று வாரங்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஆக 24, 2024 09:32

கற்பழிக்கும் கயவர்களுக்கு தண்டனிய்ய போதாது. மின்நீமம் 25 ஆண்டுகள் கடுஙகாவல். சாதாரண கைய்யதிகளுக்குண்டான செல்லில் அட்டைக்கு வேண்டும். வெளியுலக தொடர்பு இருக்க கூடாது. இரக்கம் காட்டி சிறப்பு சலுகையில் வெளி வரக்கூடாது . அவனாக விரும்பினால் மரண தண்டனிய்ய அளிக்கலாம். போர்சாரியாக எவனெனும் அரசியல் பலம் கொண்டு ஒருத்தரை இந்த வழக்கில் மாட்டி விட நினைத்தால் பதிவு செய்தால் தப்பாமல் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்


M Ramachandran
ஆக 24, 2024 09:24

பொறுப்பேற்று மம்தா ராஜினாமா செய்தலே சீரடையும்


M Ramachandran
ஆக 24, 2024 09:22

சாட்சியங்கள் திட்டமிட்டு அளிக்க பட்ட நிலையில் CBI வந்துள்ளது அவ்வளவு எலித்தல்லா பிறழ் சாட்சியங்கள் வேறு. நீதி மன்றங்கள் சாட்சியங்கள் சரியான முறையில் நிரூபிக்கா படாவிட்டால் தள்ளுபட்டி செய்து விடுவார்கள்.


Indian
ஆக 24, 2024 08:40

இன்னுமா உயிரோடு வைத்திருக்கிறீர்கள் ???? கேவலம் ..


சமூக நல விரும்பி
ஆக 24, 2024 07:49

ஏற்கனவே நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள் மக்கள். விசாரணை இப்படி ஜவ்வு போல இழுத்து கொண்டு போனா என்ன செய்வது....,?


அப்புசாமி
ஆக 24, 2024 07:03

இவிங்க பண்ணற குழப்பத்தில் குற்றவாளிகள் விடுதலை ஆவது நிச்சயம்.தாழ்ப்பாள் எங்கே தயாரிக்கப்பட்டது. எவ்ளோ ரூபாய்க்கு வாங்குனாங்க. தாழ்ப்பாளை பொருத்தியவர் எங்கே டீ சாப்புட்டாரு போன்ற சரமாரியாகக்.கேள்வி எழுப்பப்படும்.


Kasimani Baskaran
ஆக 24, 2024 06:46

குதிரைகள் தப்பி ஓடிய பின் லாயத்தை பூட்டுவதால் ஒரு பயனும் இல்லை. குதிரைகள் தப்பி ஓட உதவிய மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை