உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது

மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது

லக்னோ : உத்தர பிரதேசத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரின் வீடுகள் புல்டோசர் வாயிலாக இடித்து தள்ளப்பட்டன.

பயங்கரவாதம்

உ.பி., பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத மற்றும் மதமாற்ற நடவடிக்கைகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.மாத்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அவரை பிடித்து தருபவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே, மாத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த சங்கூர் பாபா மற்றும் அவருடன் இருந்த நீத்து என்ற நஸ்ரின் ஆகியோரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் அவர்கள் ஈடுபட இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், மதமாற்ற கும்பலின் முக்கிய மூளையாக சங்கூர் பாபா செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.மாத்பூர் மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில், ஹிந்துக்கள் மற்றும் பிற சமூகத்தினரை இஸ்லாமியராக மதமாற்றம் செய்யும் செயலில் அவர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நடவடிக்கை

'ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நிதியுதவி அளிப்பதாக கூறியும், திருமண வாக்குறுதி தந்தும், மிரட்டல் விடுத்தும், மதமாற்ற நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்' என, போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஜமாலுதீன், மெஹபூப், சங்கூர் பாபா, நஸ்ரின் ஆகியோரின் சட்டவிரோத சொத்துக்களை மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் புல்டோசர் வாயிலாக நேற்று இடித்து தள்ளினர்.குற்றம் சாட்டப்பட்ட சங்கூர் பாபாவின் செயல்பாடுகள் சமூகத்திற்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் எதிரானவை என்பது தெரியவந்துள்ளது. மதமாற்ற கும்பலுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த விஷயத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. - யோகி ஆதியநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சாமானியன்
ஜூலை 09, 2025 17:23

மத போதகர்களை எப்படித்தான் அப்பாவி மக்கள் நம்பூகிறார்களோ தெரியவில்லை.


subramanian
ஜூலை 09, 2025 14:56

இந்த மூளையை நாய் நரி இரையாக வேண்டும்.


Rathna
ஜூலை 09, 2025 11:12

100 கோடிக்கு மேல் சொத்து. சவூதி, குவைத், பஹ்ரைன் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து கள்ள ஹவாலா பணம் இவற்றை வைத்து இந்த கிழவனின் ஆட்டம் தொடங்கி உள்ளது. இது போன்றவர்களை களை எடுப்பது அவசியம்.


P. SRINIVASAN
ஜூலை 09, 2025 10:16

இந்த நாட்டில் சனாதனம், ப்ரமண்யம் உள்ளவரை மதமாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று.


subramanian
ஜூலை 09, 2025 15:00

இந்த கருத்துக்கு இஸ்லாம் உனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது .


தத்வமசி
ஜூலை 09, 2025 15:14

உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது. இது போன்ற மத மாற்ற கும்பல் வேலை செய்து கொண்டே இருக்கும்.


Haribabu Poornachari
ஜூலை 09, 2025 10:11

இவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்


மூர்க்கன்
ஜூலை 09, 2025 09:50

ஆச்சரியம் ஆனால் உண்மை நம்மை சுற்றி இவ்வளவு வன்மம் பிடித்த மாத்த வெறி ஜந்துக்களா என்று??


மூர்க்கன்
ஜூலை 09, 2025 09:48

பாவம் உன் அப்பா?? இவரு உங்க வீட்டுக்கு வரணுமா என்னா??


ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2025 09:14

தமிழகத்தில் திருட்டு திமுக கும்பலின் அட்டூழியங்களை ஒடுக்க, அழிக்க யோகிஜீ தமிழக முதலமைச்சர் ஆக வர வேண்டும்.


Yes your honor
ஜூலை 09, 2025 10:29

தவறு. இந்தக் கூட்டம் ஆட்சியில் இருக்கும்பொழுது, யோகிஜி தமிழக கவர்னராக இருக்க வேண்டும். யோகிஜி தமிழக கவர்னர் ஆனால் இவர்களின் ஊழல் ஆட்சி கண்டின்யு ஆகும் என்பதற்கு ஒரு அரை மணி நேரம் கூட கேரண்டி இருக்காது. இவர்களால் ஓர் இரவு கூட நிம்மதியாக தூங்க முடியாது. உயர் நீதிமன்றத்திற்கு ஓடுவது, உச்ச நீதிமன்றத்திற்கு ஓடுவது, தனக்கு சாதகமாக தீர்ப்பை வாங்குவது என்பதெல்லாம் யோகிஜியிடம் ஒன்றும் வேலைக்கு ஆகாது. இவர்கள் யோசிப்பதற்கு முன்பே அவர் வெற்றிபெற்று விடுவார். இதன் முழ காரணம், இவர்களின் சிந்தனை ஊழல் ஒன்றே, அவரின் சிந்தனை நாட்டுப்பற்று மட்டுமே.


Kalyanaraman
ஜூலை 09, 2025 08:12

ஆண்மையுள்ள அரசின் வெளிப்பாடு.


mohanamurugan
ஜூலை 09, 2025 07:56

நம் சகோதர சகோதரிகளுக்கு போதுமான வாழ்வாதாரங்களை உறுதி செய்திட அரசாங்கம் தவறிவிட்டது என்பது கசப்பான உண்மை. ஒவ்வொரு குடிமகனும் மதிப்பு மிகுந்த சுதந்திரமாக வாழ்ந்திட தேவையான பொருளாதார சூழலை உருவாக்க முனைவோம் அச்சூழலை உருவாக்க இயலாத அரசாங்கத்தை தூக்கி எறிவோம்


சமீபத்திய செய்தி