உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கங்கை நதியின் அதிசய சக்தி: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கங்கை நதியின் அதிசய சக்தி: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

புதுடில்லி: கங்கை நதி பிற நன்னீர் நதிகளை விட 50 மடங்கு வேகமாக கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நீரியல் நிபுணர் அஜய் சோன்கர் கூறினார்.கங்கை, இந்தியாவின் மிக புனித நதிகளில் ஒன்றாகும், இது கலாசார, ஆன்மிக மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கங்கையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அதன் தன்னைத் தானே சுத்தப்படுத்தும் திறன் கொண்டது.மஹாகும்பத்தின் போது 60 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடிய இருந்தபோதிலும், கங்கை முற்றிலும் கிருமிகள் இல்லாமல் உள்ளது.புற்றுநோய், மரபணு குறியீடு, செல் உயிரியல் மற்றும் ஆட்டோபேஜி ஆகியவற்றில் உலகளாவிய ஆராய்ச்சியாளரான டாக்டர் அஜய் சோன்கர், வாகனிங்கன் பல்கலை, ரைஸ் பல்கலை, டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி போன்ற முன்னணி நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றியவர். அவர் கங்கை நதி குறித்து ஆய்வு செய்துள்ளார்.இது குறித்து நீரியல் நிபுணர் டாக்டர் அஜய் சோன்கர் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:நன்னீர் நதியான கங்கையில், 1,100 வகையான இயற்கையான பாக்டீரியா கொல்லிகள் (பாக்டீரியோபேஜ்) இருக்கின்றன. அவை, இயற்கையாகவே மாசுபாட்டை நீக்கி, அவற்றின் எண்ணிக்கையை விட 50 மடங்கு அதிகமான கிருமிகளைக் கொன்று, அவற்றின் ஆர்.என்.ஏ.,வை மாற்றுவதன் மூலம் தண்ணீரை சுத்திகரிக்கின்றன. இவை வேறு எந்த ஒரு நன்னீர் நதிக்கும் இல்லாத சிறப்பாகும்.கங்கையின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் இந்த பாக்டீரியா கொல்லிகள் உடனுக்குடன் நதியை சுத்திகரிக்கின்றன. பாக்டீரியா கொல்லிகளின் சிறப்பு என்னவென்றால், அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கின்றன. அவற்றின் செயல்முறை, கடல் நீரை சுத்திகரிக்கும் கடல் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது தான் கங்கை நதியின் துாய்மைக்கு காரணம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்கை நதியில் காணப்படும் பாக்டீரியா கொல்லிகளின் திறன், நதி நீர் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

visu
பிப் 25, 2025 09:42

எந்த நதியையும் சுத்தப்படுத்த ரொம்ப சிரம பட வேண்டியதில்லை அதில் குப்பை போடுவதை சாக்கடை நீரை கலப்பதை நிறுத்தினாலே போதும் .ஒரு மழை பெய்தால் போதும் ஆறே சுத்தமாகிவிடும் கோடிக்கணக்கில் செலவிட வேண்டியதில்லை ஆனால் இவர்களால் கழிவு நீர் கலப்பதை தடை செய்ய தைரியமில்லை


Natarajan Ramanathan
பிப் 23, 2025 09:00

நான் இந்த மாதம் ஒன்றாம் தேதி த்ரிவேணி சங்கமத்தில் புனித நீராடினேன். மேலும் ஒரு லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்து வந்தேன். முதலில் "சிறிது" கலங்கலாக இருந்தது. இங்கு வந்தபின் அடியில் சிறிது மணல் மட்டுமே தேங்கி நீர் மிகவும் சுத்தமாகவே இருக்கிறது. அதில் சிறிது எடுத்து சென்று ராமேஸ்வரம் கோவிலில் கொடுத்தால் அந்த நீரை வாங்கி அபிஷேக அண்டாவில் சேர்க்க இந்த ட்ராவிடியா அரசு ஐம்பது ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள்.


seshadri
பிப் 22, 2025 23:53

சிவன் தலை வழியாக வரும் என்பது நமது நம்பிக்கை. அவ்வாறு இருக்கும் பொது எப்படி மாசுக்கள் இருக்கமுடியும். சிவன் மாசை அழிக்கும் கடவுள் ஆச்சே. ஓம் சிவாய நமஹ.


Rasheel
பிப் 22, 2025 22:18

நீரை தெய்வமாக மதிக்கும் நாட்டில் நீரை மாசுபடுத்தும் அக்கிரமம் நடக்கிறது. தமிழ் நாட்டில் பல நதிகளில் மிக மோசம்.


Ramesh Sargam
பிப் 22, 2025 21:56

கூவம் நதியையும் அப்படி மாற்றுவேன். இது ஸ்டாலின் அவர்களின் அடுத்த பொய் வாக்குறுதியாக இருக்கலாம். நம்பிவிடாதீர்கள்.


Sathyan
பிப் 23, 2025 06:15

இந்த பொய்யை ஸ்-ஸ்டாலின் ரொம்ப வருடமாக கூறிக்கொண்டிருக்கிறாரே தவிர ஒரு துரும்பை கூட இது வரை கிள்ளி போட்டதில்லை. ஊழல் பெருச்சாளிகளுக்கு ஊழல் செய்வதை விட வேற என்ன தெரியும். திமுக விற்கு ஓட்டு போடும் தமிழக மக்கள் மாதிரி எந்த மடையார்களும் இருக்க முடியாது.


S. Venugopal
பிப் 22, 2025 21:27

தென்னிந்திய தீபகற்பம் வடஇந்திய பகுதிகளில் சேர்வதிற்கு முன் கங்கை நதி பாயும் பகுதிகளில் கடல் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அரிச்சந்திர புராணத்திலும் இந்த கருத்து உள்ளது. திருவேணி சங்கமம் இடத்தில அந்த கடலின் ஆழம் சற்றேரக்குறைய 2 கிலோமீட்டராக இருந்திருக்கக்கூடம் என சில ஆராய்ச்சியாளார்கள் கருதுகின்றனர் தென்னிந்திய தீபகற்பம் மோதியதால் சரஸ்வதி நதி பூமிக்கு கீழ் சென்று விட்டதாகவும் இமயமலை தோன்றியதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இராமாயணத்தில் கங்கையின் ஆழம் மற்ற நதிகளை காட்டிலும் மிகவும் அதிகம் என்று குறிப்புகள் உள்ளன. ஆகவே கங்கை ஒரு நன்நீர் கடல்.


தமிழ்வேள்
பிப் 22, 2025 21:01

நீர்நிலைகளை அசுத்தம் செய்யக்கூடாது என்பதற்காகவே ஹிந்து தர்மம் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது.. ஆனால் நமது ஜனங்கள் நீர்நிலைகளை அசுத்தம் செய்யாமல் இருப்பதே இல்லை..


sridhar
பிப் 22, 2025 20:50

தமிழகத்து திராவிட தற்குறிகள் இஷ்டம் போல் பொய்யுரை பரப்புகிறது .


Kasimani Baskaran
பிப் 22, 2025 22:40

கூவ மனப்பான்மை என்பது அதுதான். சாராயம் கூட ஓடவிடுவார்கள் ஆனால் சென்னையின் சாக்கடையை சரி செய்ய மாட்டார்கள். அனைத்திலும் வன்மம்.


கயாஸ்ரீ
பிப் 22, 2025 20:33

ரெண்டு நாளக்கி முன்னாடிதான் கங்கை நீர் குளிப்பதற்கு லாயக்கில்லைன்னு அரசு ரிப்போர்ட்டே சொல்லுச்சு. இப்போ இவுரு புதுசா அந்தமானிலிருந்து வந்து கண்டு பிடிச்சி சொல்றாரு.


Raman
பிப் 22, 2025 23:08

Rs 200 stuff


Narayanan G
பிப் 22, 2025 19:53

மிக அருமை நமது முன்னோர்கள் இதை அறிந்ததனால்தான் கங்கையை புனித நதி என்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை