துாங்கும் நிதிஷ் அரசு!
பீஹாரில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஆனால், அரசோ ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் சுயநினைவின்றி இருக்கிறார். அவரது ஆட்சியில் போலீசுக்கு கூட பாதுகாப்பு இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் ரவுடிகளை பாதுகாப்பதால் போலீசாரே கொல்லப்படுகின்றனர்.தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்போலீசால் தாக்கப்பட்டேன்!
அசாமில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது கலவரம், அமைதியின்மை நிலவியதை கண்டித்து போராட்டம் நடத்தினேன். அப்போதைய பிரதமர் இந்திராவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினேன். இதற்காக என்னை அசாம் போலீசார் அடித்து துன்புறுத்தினர். ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டேன்.அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,பா.ஜ.,வின் சதி!
அமலாக்கத் துறையை தனிநபரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் அதை மட்டும் தான் செய்துள்ளனர். என் மகன் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை பா.ஜ.,வின் சதி. அதை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.பூபேஷ் பாகேல், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்