உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு சீட்டு போடும் பழைய முறை இனி வராது!

ஓட்டு சீட்டு போடும் பழைய முறை இனி வராது!

புதுடில்லி ஓட்டு சீட்டை பெட்டியில் போடும் பழைய முறையை அமல்படுத்த கோரிய மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. பதிவான ஓட்டுகளை, ஒப்புகை சீட்டுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற மனுவையும் நிராகரித்த நீதிபதிகள், 'தேர்தல் நடைமுறை மீது சந்தேகம் தேவையில்லை' என குறிப்பிட்டனர்.மின்னணு இயந்திரத்தில் நீல நிற பட்டனை அழுத்தியதும் ஓட்டு பதிவாகிறது. எந்த வேட்பாளருக்கு பதிவானது என்பதை கண்ணாடி பெட்டிக்குள் தெரியும் சீட்டில் பார்க்கலாம். அதன் பெயர் ஒப்புகை சீட்டு.ஓட்டு எண்ணும் போது தொகுதிக்கு ஐந்து சாவடிகளை தேர்வு செய்து, அங்கு பதிவான ஓட்டுகள் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. ஐந்து சாவடிகளில் சரி பார்த்தால் போதாது; அனைத்து ஓட்டுகளையும் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு உறுதி செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு இருக்கிறது; ஆகவே, முன்பு இருந்ததை போல ஓட்டு சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வழக்குகள் வந்தன.நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா விசாரித்தனர். நேற்று தீர்ப்பளித்தனர். அதன் முக்கிய அம்சங்கள்: * மின்னணு ஓட்டு பதிவு வந்த பின், ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இது மக்களின் நம்பிக்கையை உணர்த்துகிறது.* ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என்று, தேர்தல் கமிஷன் வைத்த அறிவியல் தொழில்நுட்ப ரீதியிலான வாதங்கள் ஏற்கத் தக்கவை * மீண்டும் ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது தொழில்நுட்ப முன்னேற்றத்தை நிராகரிப்பதாகும் * ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடும் கடினமான பணியை தேர்தல் கமிஷன் மீது சுமத்துவது முட்டாள்தனமானது.* ஓட்டு சரியாக பதிவாகி உள்ளதா என்பது 'விவிபாட்' திரையில் ஏழு வினாடிகளுக்கு ஒளிர்கிறது. இதன் வாயிலாக, வாக்காளரின் அறியும் உரிமை நிறைவேற்றப்படுகிறது.இந்த காரணங்களால், மூன்று மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எனினும், கீழ்க்காணும் ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்:* ஓட்டு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, 45 நாட்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஓட்டு பதிவில் குளறுபடி என எந்த வேட்பாளராவது சந்தேகித்தால், இயந்திரத்தை சரிபார்க்க ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவர் முன்னிலையில் இயந்திரங்களை சோதனை செய்ய வேண்டும். அதற்கு ஆகும் செலவை வேட்பாளரே செலுத்த வேண்டும். இயந்திரம் தவறாக செயல்பட்டது நிரூபணம் ஆனால், அவர் செலுத்திய கட்டணத்தை திரும்ப தரவேண்டும்* தோல்வி அடைந்த வேட்பாளர் கோரிக்கை விடுத்தால், ஓட்டு இயந்திரத்தின் மைக்ரோ கன்ட்ரோலரை ஆய்வு செய்ய, பொறியாளர்களை அனுமதிக்க வேண்டும்* ஓட்டு இயந்திரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன், 'பார் கோடு' அமைப்பது குறித்தும், ஒப்புகை சீட்டுகளை இயந்திரம் வாயிலாக எண்ண முடியுமா என்பதையும் தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரிய அடி!

காங்கிரஸ் மற்றும் 'இண்டியா' கூட்டணி கட்சியினர் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவதை வழக்கமாக வைத்துஇருந்தனர். மின்னணு ஓட்டுப்பதிவு வந்தபின், அதை செய்ய முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் வாய்க்கு வந்ததை பேசினர். இந்த தீர்ப்பு அவர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.மோடி, பிரதமர்

தொடரும்!

தீர்ப்பை கவனத்தில் கொள்வோம். விவிபாட் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். ஜெய்ராம் ரமேஷ்காங்., பொதுச்செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

வல்லரசு
ஏப் 27, 2024 22:14

இந்தியாவில் வெறும் சாப்டுவேர் இஞ்சினியர்களை வைத்துக்கொண்டு சாப்பாடு போடமுடியாது


முருகன்
ஏப் 27, 2024 18:59

இஷ்டம் போல செயல் படலாம் கேள்வி கேட்க யாரும் இல்லை இனி மகிழ்ச்சி தான்


Barakat Ali
ஏப் 27, 2024 17:23

இதையும் அழுகுணி என்று காங்கிரஸ் சொல்லக்கூடும் இரண்டரை ஆண்டுகள் காங்கிரசின் அமைச்சரவை என்று பாஜக ஒப்புக்கொண்டால் காங்கிரஸ் ஓரளவு சமாதானம் ஆகும்


spr
ஏப் 27, 2024 17:22

சில சமயங்களில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்குகிறதோ? பாராட்டலாம் நாளை வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரும் என்பதால், ஆளும்கட்சிக்குச் சாதகமான கருத்து என்ற பொதுவான குற்றச்சாட்டு எடுபடாது வரும் கட்சிகள் எதுவும் இதனை மாற்றவும் போவதில்லை மேலை நாடுகள் செய்யவில்லையென்றால் நாம் செய்யக் கூடாதா


Barakat Ali
ஏப் 27, 2024 15:58

மக்கள் காங்கிரஸ் கூட்டணியை அளவிட்டால் காங்கிரஸ் ஏன் கேள்வி கேட்கப்போகிறது ??


GoK
ஏப் 27, 2024 14:45

கேஸ் போட்ட இந்த தன்னார்வலர் இயக்கம் ஒரு IIT மற்றும் IIM படிப்பு படித்த ஒருவர் தலைமையில் இயங்குகிறது, படிப்புக்கும் பொது அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை-


M S RAGHUNATHAN
ஏப் 27, 2024 20:43

Mr Prashanth Bhushan can file a petition that the case should be re examined by a member bench headed by CJI CJI will gleefully agree to that


அரசு
ஏப் 27, 2024 12:59

ஏன் வராது? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வரு‌ம்.


சாமிநாதன்,மன்னார்குடி
ஏப் 27, 2024 14:46

காமெடி பண்ணாதீங்க ஒழுங்கா ஓரமா போயிருங்க...


A1Suresh
ஏப் 27, 2024 12:15

சென்னை ஐஐடியில் சிக்ஸ்ஜி தொழில்நுட்பத்திற்காக அற்பத்துநாலு பிட் ப்ராசசர் டிசைன் செய்துவிட்டனர் அதற்கு சக்தி என்று பெயரும் வைத்தாகி விட்டது அதனை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் துவங்கிவிட்டனர் அதற்கென பாரத் என்னும் பெயரில் தனி ஆப்பரேட்டிங்க் சிஸ்டமும் தயாராகி விட்டது ஆக செமிகண்டக்டர் துறையிலும் மேக் இண் இண்டியா என்றாகி விட்டது இனி இன்டெல், ஏ ஆர் எம் போன்ற உலக ஜாம்பவான்களுக்கு போட்டியாக வளர்ந்து விட்டோம் இறக்குமதி செய்யாமல் எதிர்காலத்தில் நாமே ஈவிஎம் மெஷின்களை நூறு சதவிகிதம் டிசைனும் செய்யலாம் தயாரிக்கவும் முடியும் இது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வழிவகுக்கும்


A1Suresh
ஏப் 27, 2024 12:10

அமெரிக்காவிலேயே ஈவிஎம் எந்திரம் இல்லை ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ இல்லை என்று கூவுகின்றனர் ஆனால் உலகிலேயே திறமைமிக்க அதிக கம்யூட்டர் சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் வசிப்பது நமது நாட்டில் தான் உலகிலேயே முதன்முறையாக யூபியை டிஜிட்டல் பணபரிமாற்றம் கொணர்ந்தது நமது நாட்டில் தான்


Venkatasubramanian krishnamurthy
ஏப் 27, 2024 11:17

மின்னணு வாக்கு முறையால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாக கோர்ட் கருத்துச் சொல்லியிருக்கிறது சென்ற தேர்தலுக்கும் இப்போது நடந்த தேர்தலுக்கும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது வழக்கமான சோம்பலையும் மீறூ வெய்யில் ஒரு காரணமாகவும் இருக்கலாம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி அதில் ஆன்லைன் வாக்குப்பதிவுக்கான சாத்தியத்தை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்


மேலும் செய்திகள்