உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகளை கவரும் உயிரியல் பூங்கா; விலங்குகளை தத்தெடுக்கும் வாய்ப்பு

குழந்தைகளை கவரும் உயிரியல் பூங்கா; விலங்குகளை தத்தெடுக்கும் வாய்ப்பு

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பிலிகுலாவில் 202 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பிலிகுலா உயிரியல் பூங்கா.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விலங்குகளை பொது மக்கள் பார்த்து ரசிக்க, பிலிகுலா நிசர்கதாமாவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், சட்டப்படி இந்த பூங்காவை அங்கீகரித்துள்ளது. நவீன விலங்கியல் நடைமுறைப்படி, விலங்குகள் அடைக்கப்படும் கூண்டுகள், விலங்குகள் இயற்கையான சூழலில் வாழ்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளன.இங்கு விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை மையம், நோய் அறிதல் ஆய்வகம், கண்காணிப்பு கூண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ராஜ நாகங்களின் இனப்பெருக்க மையமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே உயிரியல் பூங்கா இதுவாகும். காயமடையும் விலங்குகளை மீட்கும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில், 400 விலங்குகள், ஊர்வன, பறவைகள் உள்ளன.ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விலங்குகள் தொடர்பான ஆராய்ச்சி, பயிற்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இங்குள்ள விலங்குகளை நீங்கள் தத்தெடுத்து, ஆண்டுதோறும் அதற்காகும் பராமரிப்பு, மருந்துகள், உணவு போன்ற செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்ள, 'விலங்குகள் தத்தெடுப்பு' திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.21_Article_0002, 21_Article_0003, 21_Article_0004

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, பஸ்சில் செல்லலாம். ரயிலில் செல்வோர், மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்திலும்; பஸ்சில் செல்வோர், மங்களூரு பஸ் நிலையத்திலும் இறங்கி, அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் செல்லலாம்.பிலிகுலா உயிரியல் பூங்காவில் உள்ள ராஜநாகங்கள். (அடுத்த படம்) சண்டைபோடும் புலிகள். (கடைசி படம்) லங்கூர் இன குரங்கு.லங்கூர் இன குரங்கு.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, பஸ்சில் செல்லலாம். ரயிலில் செல்வோர், மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்திலும்; பஸ்சில் செல்வோர், மங்களூரு பஸ் நிலையத்திலும் இறங்கி, அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் செல்லலாம்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, பஸ்சில் செல்லலாம். ரயிலில் செல்வோர், மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்திலும்; பஸ்சில் செல்வோர், மங்களூரு பஸ் நிலையத்திலும் இறங்கி, அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி