உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய பீஹார் மக்கள்!

குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய பீஹார் மக்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்று வாக்குறுதி அளித்தும் லாலுவின் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. குடும்ப அரசியல், ஊழல், காட்டாட்சியை வாக்காளர்கள் விரும்புவதில்லை என்பதை நிரூபணம் செய்யும் வகையில், பீஹார் மாநில தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு, தேஜ கூட்டணி மக்களுக்கு வழங்கிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ததை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் ஆர்ஜேடி கட்சியின் தோல்விக்கு குடும்ப அரசியலே காரணம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qgn30use&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியபோது லாலு பிரசாத் தனது மனைவிக்கு முதல்வர் பதவியை வழங்கினார். மகளுக்கு எம்.பி., பதவி வழங்கினார். இரண்டு மகன்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கினார். அவரது உறவினர்கள் பலர், பல்வேறு பொறுப்புகளில் மாநிலத்தை சீரழித்தனர்.அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்களில் எங்கு பார்த்தாலும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தினர். இதில் மக்கள் அடைந்த அதிருப்தி தான், அந்த கட்சியினரை படுதோல்வி அடையச் செய்துள்ளது. லாலு முதல்வராக இருந்தபோது நடந்த கால்நடைத்தீவன ஊழல், அரசு வேலைக்கு இடத்தை லஞ்சமாக பெற்றது போன்றவை, மாநில மக்கள் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கின்றன.இந்த ஊழல்களுக்காக, லாலுவும் அவரது குடும்பத்தினரும் இன்னும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய அரசியலால் தான் பீஹார் மக்கள் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியை புறக்கணித்து உள்ளனர். அதுமட்டுமின்றி லாலுவின் இன்னொரு மகன் தேஜ் பிரதாப் தனிக்கட்சி ஆரம்பித்து, தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை தாறுமாறாக செலவழித்து அட்டகாசம் செய்யும் அவரது செயல்பாடுகள், லாலுவின் குடும்பத்துக்கு ஏற்கனவே இருந்த மிச்சம் மீதி பெயரையும் கெடுத்து ஒழிப்பதாக உள்ளன. இது போதாது என்று அவர் குடும்ப அரசியல் பின்னணியில் முன்னணிக்கு வந்துள்ள ராகுலுடன் தேஜஸ்வி யாதவ் கைகோர்த்து இருந்தார்.இத்தகைய காரணங்களால் தான், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தும் தேர்தலில் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்றால் என்ன செலவாகும் என்று கணக்கு தெரியுமா என்று பாஜ தலைவர்கள் பிரசாரத்தில் கேள்வி எழுப்பியது, பீஹார் மக்கள் மனதில் அப்படியே பதிந்து விட்டது.இதனால், தேஜஸ்வி கூறியது பொய் வாக்குறுதி என்று வாக்காளர்கள் நம்பி விட்டனர். இதன் காரணமாகே அவரது கட்சி, போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தோல்வி முகத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Veluvenkatesh
நவ 15, 2025 20:00

டாஸ்மாக் நாட்டின் உழைக்கும் ஆண்களை எல்லாம் குடி நோயிக்கு ஆளாக்கி விட்டாச்சு.... இனி இந்த திராவிட குப்பைகளை ஒழிப்பது ஒன்றுதான் தமிழ்நாடு உருப்பட வழி வகுக்கும் . அடுத்து ஆட்சிக்கு வர விரும்பும் கட்சி டாஸ்மாக் ஒழிப்பை கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம், செய்வார்களா தமிழக அரசியல் வாதிகள்???


பேசும் தமிழன்
நவ 14, 2025 20:08

பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள்.... மதுவை..... சாராய கடைகளை தடை செய்த பிஜெபி கூட்டணியை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.... ஆனால் இங்கே தமிழ் நாட்டில் சாராய கடையை திறந்து வைத்து மக்களை சீரழிக்கும் ஆட்களுக்கு ஓட்டு போடுகிறார்கள்..... மக்கள் தான் திருந்த வேண்டும்.


பேசும் தமிழன்
நவ 14, 2025 19:59

தமிழ்நாட்டிலும் குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கும் நேரம் வந்து விட்டது..... இனிமேலும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.


Yaro Oruvan
நவ 14, 2025 19:11

தமிழக மக்களின் மனநிலையும் இதேதான்.. இன்பநிதி முதல்வராகும் அளவில் உள்ளது திருட்டு திராவிட டாஸ்மாக் மாடல் கட்சி


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 14, 2025 20:33

தமிழக வாக்காளர்களுக்கு அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லை ....


N S
நவ 14, 2025 17:32

ப்பொழுது உஷார். என்னத்தை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றமுடியும் என்று ஆலோசனை விரைவில் தொடங்கும். சுருட்டியதில் கொஞ்சம் வெளியே வரவேண்டும், அவ்வளவுதான்.


Jay
நவ 14, 2025 17:09

மக்கள் சற்று சிந்தித்தால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக என்ற கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அரசு ஆட்சியில் இருந்து அரும்பாடு பட்டு தான் ஜனநாயக ஆட்சிக்கு வந்துள்ளோம். இந்த ஆட்சி முறையிலும் தொடர்ந்து ஒரு குடும்பத்திற்கு ஓட்டு போட்டு மீண்டும் அரசாட்சியை கொண்டு வரக்கூடாது. இதைத்தான் அடுத்த முறை தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.


Sundar R
நவ 14, 2025 16:45

வாரிசு அரசியல் செய்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் காலம் மலையேறி விட்டது. மக்கள் அனைவரும் உஷாராகி விட்டார்கள். "உன்னால் தான் நான் கெட்டேன், என்னாலே தான் நீ கெட்டே" என்று பிஹாரில் ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் சட்டையைப் பிய்த்துக் கொண்டு சண்டை போட்டது போல், தமிழகத்திலும் ராகுல் காந்தியும், சுடாலினும் சட்டையைப் பிய்த்துக் கொண்டு சண்டை போடும் அந்த நல்ல விசேஷமான நாளைக் காண்பதற்காக தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


S.V.Srinivasan
நவ 14, 2025 15:46

தமிழகத்தில் 2026இல் இது போன்ற குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய நற்செய்தி வர வேண்டும் ஆண்டவா.


theruvasagan
நவ 14, 2025 15:14

பானிபூரி பீடவாயன் என்று ஊழல் முதலைகளால் பழித்துப் பேசப்பட்ட வடக்கன்களுக்கு சிந்தித்து ஓட்டு போடும் பக்குவம் உள்ளது. இலவசங்களாலும் டாஸ்மாக் சரக்காலும் மூளை மழுங்கி மயக்கத்தில் கிடக்கும் தமிழனுக்கு சிந்திக்குமா திறன் இல்லாமல் போய்விட்டது.


Barakat Ali
நவ 14, 2025 15:08

தமிழர்களை விட, திராவிடர்களை விட நன்கு சிந்தித்து வாக்களிப்பவர்களா பீகாரிகள் ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை