உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றவருக்கு நிரந்தர வருவாய் இல்லை: தேவசம் விஜிலன்ஸ் அறிக்கையில் அதிர்ச்சி

சபரிமலையில் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றவருக்கு நிரந்தர வருவாய் இல்லை: தேவசம் விஜிலன்ஸ் அறிக்கையில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: 'சபரிமலையில் தங்கமுலாம் பூசும் பணிகளுக்கான செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்திக்கு நிரந்தரமான வருவாய் இல்லை' என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழல் கண்காணிப்பு பிரிவு, இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேலும், தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மறு புறம் தேவசம் போர்டின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் வருவாய் குறித்து அவரது பட்டய கணக்காளர் மூலம் ஆய்வு செய்தோம். அதில் அவருக்கு நிரந்தரவருவாய் இல்லை என்பது தெரிந்தது. கோவில் கருவறை கதவுக்கு தங்கமுலாம் பூசும் செலவை போத்தி ஏற்றுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில், அதற்காக செலவு செய்தது கர்நாடகாவின் பல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் கோவர்தனன் மற்றும் பெங்களூரு தொழிலதிபர் அஜித் குமார் தான். உன்னிகிருஷ்ணன் போத்தியும் கோவிலுக்காக சில நன்கொடைகளை வழங்கி உள்ளார். அவரது செலவில் நிகழ்ந்த பல்வேறு பணிகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும், தொழிலதிபர் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

VENKATASUBRAMANIAN
அக் 13, 2025 08:10

இவர் பினாமி தான் முக்கியம் நபர் வேறு


ஜெய்ஹிந்த்புரம்
அக் 13, 2025 03:55

தங்கமுலாம் விவகாரம் இவ்வளவு வருஷமா இருக்கே, தேவசம் விஜிலென்ஸ் க்கு இப்போ தான் தூக்கம் கலைஞ்சதோ?


Kasimani Baskaran
அக் 13, 2025 03:46

கோவிலுக்கு காணிக்கை கொடுக்க ஒரு பினாமி - இப்பொழுதுதான் கேள்விப்படும் ஒரு புது உத்தி. ஆனால் அதிலும் தங்கத்தை அபேஸ் செய்து சாதித்திருக்கிறார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 13, 2025 03:39

நிரந்தர வருவாய் இல்லையா, அதனால என்ன? இவரும் வீட்டு வாடகைக்கு நண்பர்களின் உதவியை யூஸ் பண்றாரா? ஆனா பங்களா, தோட்டம் பல கோடி ரூபாயில் வாங்கீருப்பாரே?


SANKAR
அக் 13, 2025 04:12

Jaihindh I know who your finger is pointing to ! Congrats


visu
அக் 13, 2025 05:21

ஆமா சொந்த காரே இல்லாத முதல்வர் பலகோடி மதிப்புள்ள அயல்நாட்டு கார்களில் பயணிக்கும் மாநிலம்


Hari
அக் 13, 2025 09:33

சொந்தமாக ரேஷன் கார்டு இல்லை சொந்த சைக்கிள் இல்லை சொந்த வீடு இல்லை சொந்த கார் இல்லை சொந்த மூளையும் இல்லை .பினராயி பெட்டெர் கோயில் கதவைத்தான் திருடினான் ஆனால் தமிழகத்தில் கோயிலவே திருடிட்டான்


Ramesh Sargam
அக் 13, 2025 02:36

சாமிக்குகூட பயப்படுவதில்லை. கலிகாலம் முத்திப்போச்சு. உலகம் அழியும் நேரம் நெருங்கிடிச்சி.


raja
அக் 13, 2025 06:12

அப்படி இல்லைங்க... அங்கே முலாம் பூசி கொள்ளை... இங்கே உருக்கி உருண்டை பிடித்து கொள்ளை .. ஆக மொத்தத்தில் திருட்டு திராவிடர்கள் பெருகி விட்டார்கள்


தலைவன்
அக் 13, 2025 11:44

சாமிக்கு என்ன வெங்காயத்துக்கு தங்கம்ங்கிறேன் ?? அதெப்படி மாயம்?? ஆகும் இதென்ன விட்டலாச்சார்யா படமா?? காணிக்கை நகை திருட்டுன்னுல செய்தி போடணும். காணிக்கை செலுத்துற மூடர் கூடம் திருந்துமா??


ஜெய்ஹிந்த்புரம்
அக் 14, 2025 17:03

இது சாமிக்கு தெரியுமோ?