உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்தரத்தில் மேடை சரிந்து தொழிலதிபர் பலி

அந்தரத்தில் மேடை சரிந்து தொழிலதிபர் பலி

ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம் ைஹதராபாதில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனம் விஸ்டெக்ஸ். சஞ்சய் ஷா, 56, என்பவர் இந்நிறுவனத்தை 1999ல் துவங்கினார். நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி, ஹைதராபாதின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், கடந்த 18ம் தேதி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துவக்க நிகழ்வில், சஞ்சய் ஷா மற்றும் நிறுவன தலைவர் ராஜு தத்லா இருவரும் கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கும் மேடை வாயிலாக இறங்குவது போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடை கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென அதன் கம்பிகள் அறுந்தன. இதில் மேடை கீழே சரிந்து விழுந்தது. அதிலிருந்த சஞ்சய் ஷா, ராஜு தத்லா இருவரும், 20 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தனர்.தலையில் பலத்த காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா நேற்று உயிரிழந்தார். ராஜு தத்லா நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ