உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி- சரத் பவார் இடையே தொடரும் அரசியல் நட்பு

மோடி- சரத் பவார் இடையே தொடரும் அரசியல் நட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரதமர் மோடியும் மஹாராஷ்டிராவின் சீனியர் அரசியல் வாதியுமான சரத் பவாரும் எதிர் அணியில் இருந்தாலும் அவர்களின் நட்பு தொடர்கிறது. ஆனால், பவாரின் கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் காங்கிரஸ் தலைவர்களும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மோடியை கடுமையாக விமர்சிக்கின்றனர்.மோடியின் 75வது பிறந்த நாள் நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. 75 வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என, ஒருமுறை மோடி சொல்லியிருந்தார். ஆனால், பா.ஜ.,வோ இந்த நிபந்தனை மோடிக்கு கிடையாது என சொல்லியுள்ளது.சில பத்திரிகையாளர்கள் சரத் பவாரை அணுகி, 75 வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என ஒருமுறை மோடி சொல்லியிருக்கிறார். இப்போது அவர் 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். உங்கள் கருத்து என்ன? என பவாரி டம் கேட்டனர்.நிச்சயம் ஏதாவது ஏடா கூடமாக பதில் சொல்வார். அதை, 'பிரேக்கிங் நியூஸ்' ஆக்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்தனர் பத்திரிகையாளர்கள். அதற்கு, 'நானே அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. அப்படியிருக்க வேறொருவரை ஓய்வு பெறுங்கள் என எப்படி சொல்ல முடியும்?' என்றார் பவார். இதைக் கேட்டு வெறுத்துப் போன பத்திரிகையாளர்கள் இடத்தை காலி செய்தனர்.பவாருக்கு இப்போது வயது 84. அப்படியிருக்க அவர் எப்படி மோடியை ஓய்வு பெற சொல்லுவார்?'இண்டி' கூட்டணியில் பவார் கட்சி இருந்தாலும் பல முறை அவருடைய கருத்து கூட்டணி தலைவர்களை பிரச்னையில் ஆழ்த்தியுள்ளது. அதானி குழுமத்தின் மீது புகார் எழுந்த போது, பார்லி., கூட்டுக் ட்டுக் குழு அமைக் அமைக்க வேண்டும் என, இண்டி கூட்டணி மோடிக்கு கோரிக்கை வைத்தது.ஆனால் பவாரோ, இது தேவையில்லாத விஷயம் என அறிவித்து, இண்டி கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்தார். அடிக்கடி பவாரை சந்திப்பவர் அதானி என்பது வேறு விஷயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
செப் 22, 2025 06:38

மோடி ட்ரம்ப் நட்பு மாதிரி...புனிதமானது.


திகழ்ஓவியன்
செப் 21, 2025 13:23

தமிழ் நாட்டிலும் இவர்க்கு ஸ்டாலின் குட் புக்ஸ் இல் உள்ளார் ஆனால் ஜெண்டா வை பிடிக்காது, மோடியும் ஸ்டாலின் இடம் 22 MP உள்ளனர் , ஆபத்து என்றால் அன்று வாஜ்பாய் அரசை காத்தது போல காப்பார் என்று மோடி நம்பிக்கொண்டு தான் இருக்கிறார்


தஞ்சை மாமன்னர்
செப் 21, 2025 15:00

200 க்கு விட்டா கதை வசனம் எழுதி ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செவ்வனே செய்து பரம்பரை பரம்பரையாக தனது விசுவாசத்தை நிரூபித்தவர்கள்


Iyer
செப் 21, 2025 10:09

75 வயது எட்டினால் - கட்சி மற்றும் அரசு பதவி துறக்கவேண்டும் என்று பிஜேபி ல் சட்டம் உருவாக்கப்பட்டது என்பது உண்மை. But there is always exception to மோதியின் சேவை இன்னும் 10 - 15 ஆண்டுகள் நாட்டுக்கு தேவை. ஆகையால் பிஜேபி - மோதியை - அவரது உடல்நலன் அனுமதிக்கும் வரை - பிரதமராக தொடர அனுமதிக்கவேண்டும்


Thravisham
செப் 21, 2025 17:28

ஓகே இதே அளவுகோலைத்தான் பாஜக தமிழக சிங்கத்திடம் காண்பித்திருக்க வேண்டும்


Perumal Pillai
செப் 21, 2025 10:06

பவார் மகாராஷ்டிரா கருணாநிதி. உலக பணக்காரர்களில் ஒருவர் .


Barakat Ali
செப் 21, 2025 08:15

திருட்டு குடும்பத்திடம் நட்பு பாராட்டுபவர் யோக்கியர் ன்னு நாங்களும் நம்பிட்டோம் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2025 08:14

மோடிக்கு மராட்டிய கட்டுமரத்திடம் மட்டுமா அரசியல் நட்பு தொடர்கிறது. தமிழக கட்டுமரத்தின் குடும்பத்துடனும் நல்ல அரசியல் நட்பு உள்ளது .....


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 21, 2025 10:25

என்ன செய்வது? அரசியல் சாக்கடை எனும் கடலில் மூழ்காமல் இருக்கவும் கட்டுமரம் வேண்டுமே


புதிய வீடியோ