உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரும் 22ம் தேதி முதல்! மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., அமலாகிறது

வரும் 22ம் தேதி முதல்! மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., அமலாகிறது

புதுடில்லி : டில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்த கவுன்சில் கூட்டம் ஒரே நாளில் முடிவடைந்தது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்ததாக கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cm5kpfw4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் வெறும் வரி விகித குறைப்பு மட்டும் கிடையாது; வணிகம் செய்வதையும், மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது. பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடுமையாக ஆராயப்பட்டு பெரும்பாலான பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதிக பணியார்களைக் கொண்ட துறைகளுக்கு வலுவான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவால், விவசாயிகளும், விவாசயத் துறையும் பயன்பெறுவர். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., பதிவு செய்வது, தாக்கல் செய்வது, ரீபண்டு பெறுவது உள்ளிட்டவை எளிதாக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வரி குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை. தற்போதைய சூழலில், வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இழப்பீடு செஸ் தொடரும். இதனால், புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்களுக்கு தொடர்ந்து 28 சதவீத வரியும் கூடுதலாக இழப்பீடு செஸ் வசூலிக்கப்படும். புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கான 40 சதவீத வரி விதிப்பு அமலாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பொதுமக்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர பிரிவினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும். இந்த முடிவு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, சிறிய வர்த்தகர்கள் மற்றும் வணிகங்களுக்கு, வணிகம் செய்வதை எளிதாக்கும். - நரேந்திர மோடி பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Ramesh Trichy
செப் 04, 2025 16:40

The government has taken bold steps like a reduction in GST & Income tax. Weldone.. So many GST issues are getting resolved. Salute to Modiji & team.


மனிதன்
செப் 04, 2025 16:04

EVM மும், ஓட்டு திருட்டும் இனி கொஞ்சம் சிரமம்தான்.. அதான் இப்படி மக்களை கொஞ்சம்....


R Dhasarathan
செப் 04, 2025 15:37

எல்லா உற்பத்தியாளர்களுக்கும் அவர்கள் பொருட்களின் Threshold Value மற்றும் டாலரான்ஸ் மதிப்பு பற்றி தெரியும் . வரி குறைப்பு பெரிய அளவில் மாற்றம் வருவது சந்தேகமே. ஆனால் வர்த்தகமும் உற்பத்தியும் சுலபமாகும், சில பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும்.... பெரிய மாற்றங்கள் நிகழ அரசு மக்களை மதிக்க வேண்டும் அவர்கள் சொல்வதை செவி கொடுத்துக் கேட்க வேண்டும்


INDIAN Kumar
செப் 04, 2025 13:29

பொருட்கள் விலை குறையும் மக்கள் மகிழ்வார்கள் எதிர்க்கட்சிகள் புலம்புவார்கள் .


INDIAN Kumar
செப் 04, 2025 13:27

பாராட்ட மனமில்லை என்றால் பரவா இல்லை குறை சொல்லாதீர்கள் ,


Rameshmoorthy
செப் 04, 2025 11:27

Good decision and government should ensure there is no anti profiteering, reduction in MRP by manufacturers and see that the benefit goes to public, just fyi in Tamil Nadu there is already an increase in price for coffee and tea


KRISHNAN R
செப் 04, 2025 11:01

முன்பு 5-12 வரை இருந்த பல பொருட்கள்.. GST 18. மேல்.. என்று போட்டு விட்டு இப்போ இது என்ன குறைப்பு


ஆரூர் ரங்
செப் 04, 2025 11:45

கிட்டத்தட்ட 2500 அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கும் மூலப் பொருட்கள், உதிரி பாகங்களுக்கும் முழு வரிவிலக்கு என்பதை முதலில் பாராட்டுங்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 04, 2025 11:00

இந்த ஜி எஸ் டி மறு சீரமைப்பில் நாய்களுக்கும் கழுதைகளுக்கும் விலக்கு உண்டா என்பது பற்றி ஆண்டவர் கேட்கிறார்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 04, 2025 09:39

நெடுஞ்சாலை டோல் கட்டண கொள்ளை நடவடிக்கை எடுக்கலாமே


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 04, 2025 10:57

எங்களது சந்ததியினரின் வாழ்வாதாரத்தில் கை வைக்க எவருக்கும் அனுமதி இல்லை.


ஆரூர் ரங்
செப் 04, 2025 12:38

உங்களுக்கு பழைய மண் ஒற்றையடிப்பாதை போதும்.


Palanivelu Kandasamy
செப் 04, 2025 08:41

அரசின் இசை திருப்பல் வேலை இது. அமெரிக்க வரி விதிப்பை கையாள இதுவல்ல நடவடிக்கை. கார் வரியைக் குறைப்பதால் தயாரிப்பாளர்களுக்கு நன்மை, மற்றவர்களுக்கு? அமெரிக்காவின் வரி விதிப்பை இலகுவாக சமாளிக்க வழிகள் இல்லையா என்ன? ஓணம், பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான சீசன் தொடங்கி விட்டது, அப்போது தேவைகள் அதிகமாக இருக்கும். ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் பொருட்களை இந்திய நுகர்வோருக்கு நியாயமான விலையில் மறுபகிர்வு செய்யலாம் 1. லாப வரம்பைக் குறைத்தல். 2. இந்திய நுகர்வுக்கான விலையை மறுசீரமைத்தல் 3. குறுகிய காலத்திற்கு உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் 4. அரசாங்கத்தால் ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகளைக் குறைத்தல் இது பெரும்பாலான இந்தியர்களுக்கு தயாரிப்பு எளிதாகக் கிடைக்கும்படி செய்யும் மற்றும் விற்பனையை விரிவுபடுத்தும் நிச்சயமாக இது பெரும்பாலான பொருட்களின் தொழில்களை கட்டண நெருக்கடியிலிருந்து விடுவிக்கும். ஊழியர்களை பணிநீக்கம் செய்து மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. அழுகும் காய்கறிகளின் விலை [பாலுக்கும் கூட ] குறைந்தபோது என்ன நடந்தது - உற்பத்தியாளர்கள் கொஞ்சம் கூட அறிவில்லாமல் தெருக்களில் கொட்டினார். அவற்றை அனாதை இல்லங்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கலாம். இப்போது எடுக்கும் நடவடிக்கைகளின் நோக்கமே வேறு - தேர்தல் தான்.


visu
செப் 04, 2025 19:46

ஆரம்பமே தவறு.கார் வரியை குறைத்தால் வாங்கும் மக்களுக்கு பலன் இல்லையா.