| ADDED : ஜன 29, 2024 11:05 PM
துமகூரு: ''துமகூரு மாவட்டத்தை, இரண்டாவது பெங்களுராக உருவாக்குவேன்,'' என துணை முதல்வர் சிவகுமார் சபதம் செய்தார்.துமகூரின், அரசு பி.யூ., கல்லுாரி மைதானத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை, துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:பெங்களூரை போன்று, துமகூரு மாவட்டம் மேம்படுத்தப்படும். இதற்காக மாவட்டத்தின், பல்வேறு தாலுகாக்களில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், 658 பணிகள் துவக்கப்பட்டன. துமகூரில் அதிக வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.துமகூரு மாவட்டத்தை, இரண்டாவது பெங்களூராக உருவாக்க சபதம் செய்துள்ளோம். எங்களின் வாக்குறுதித் திட்டங்கள், மக்களின் மனதில் இடம் பிடித்து உள்ளது. அவர்களின் பொருளாதார சுமையை குறைத்துள்ளன. வாக்குறுதி திட்டங்கள் உட்பட, பல திட்டங்களை செயல்படுத்தி, பயனாளிகளுக்கு சலுகைகள் அளிக்கிறோம். மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே, எங்களின் குறிக்கோளாகும்.இவ்வாறு அவர் கூறினார்.