உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காத சிம்லா ஒப்பந்தம்: 1971 முதல் இன்று வரை பின்பற்றியதா பாகிஸ்தான்?

மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காத சிம்லா ஒப்பந்தம்: 1971 முதல் இன்று வரை பின்பற்றியதா பாகிஸ்தான்?

காஷ்மீரில் சுற்றுலா பயணியர் ஒவ்வொருவர் பெயர் கேட்டு, மதம் அறிந்து, படுகொலையை செய்தனர், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள். அங்கு ரத்த ஆறு ஒழுகியதன் ஈரம் காயும் முன்பே, நாங்கள் உத்தமர்கள் என கூறி எல்லையில், பாகிஸ்தான் தொடர் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்தியா அறிவித்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் தடை, துாதரக ரீதியிலான கட்டுப்பாடுகள், பாகிஸ்தானியர் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு ஆகியவற்றை கண்டு வெகுண்டு எழுந்து, 1971ம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் ரத்து என பாகிஸ்தான் அறிவித்தது.பாகிஸ்தானை பொறுத்தவரை இம்முடிவு, 'புது குண்டு' ஆக இருந்தாலும், நம்மை பொறுத்தவரை அது நமுத்துப்போன பட்டாசாக தான் கருத முடியும். காரணம், சிம்லா ஒப்பந்தம் என்பதால், யாருக்கு லாபம்? அதன் பலனை அனுபவிப்பது பாகிஸ்தான் தான்.'சிம்லா ஒப்பந்தம்' நீண்டகால ஒப்பந்தமாக கருதப்படவில்லை.- அதில், பெரும்பாலானவை - பாகிஸ்தானிய போர்க் கைதிகளைத் திரும்பப் பெறுதல், வர்த்தகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பது போன்ற உடனடி நடவடிக்கைகள் தான்.

ஒப்பந்தத்தை மீறியது யார்?

இரு நாடுகள் இடையே மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கையெழுத்திடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் எப்போதாவது முழுமையாக பின்பற்றியது உண்டா? எத்தனை முறை தான் விதிமீறல்...இந்திராவும், சுல்பிகர் அலி புட்டோவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திரும்பி சில மாதங்களிலேயே, காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆயுதம் வழங்கியது பாகிஸ்தான். கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால், படைகளை அனுப்புவதன் வாயிலாக பாகிஸ்தான் பல முறை ஒப்பந்தத்தை மீறியது. அது மட்டுமின்றி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உரமூட்டி வளர்த்து, தீவிரவாதிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கி அனுப்பி வைத்தது பாகிஸ்தான்.

ஆபரேஷன் மேகதுாத்

மேலும், சிம்லா ஒப்பந்தத்தின் விதிகளை, மாற்றவும் முயன்றது. உலகின் மிக உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறையை பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பல முறை முயன்றது. 1984ம் ஆண்டு, இந்தியா 'ஆபரேஷன் மேகதுாத்' எனும் ராணுவ நடவடிக்கையைத் மேற்கொண்டு, பனிப்பாறையின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசமாக்கியது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் இணைந்து, தொடர் கண்காணிப்பின் வாயிலாக சியாச்சினின் பனி சிகரங்களில் இந்திய கொடியை பறக்கவிட்டுள்ளது. இந்த ராணுவ பாதுகாப்பு என்பது உலகின் மிக உயர்ந்த பகுதியில் நடக்கும் தொடர் ராணுவ நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட அனைத்து காஷ்மீர் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என, 1994ல் இந்திய பார்லிமென்ட் அறிவித்தது.

கார்கில் போர்

வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற பின், பாகிஸ்தானுடன் பல்வேறு சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனினும், கடந்த 1999ல், நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் மூளையாக செயல்பட, கார்கில் போருக்கு பாக்., வழிவகுத்தது. கார்கிலில் 150 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள பகுதிகளை, பாகிஸ்தான் நயவஞ்சமாக தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்காக பாகிஸ்தான் எடுத்த முடிவு, ஒரு கொடூரமான மோதலுக்கு வழிவகுத்தது. இதில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியா வெற்றிகரமாகக் கைப்பற்றியது. அதை நாம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவஸ்) கொண்டாடி வருகிறோம்.

ஓய்ந்த வெடிசத்தம்

கடந்த 2003ம் ஆண்டில், கார்கில் மோதலுக்கு, நான்கு ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இந்தியா மீது பகமை பாராட்டிய பாக்., சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் கூட இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.கடந்த 2003 முதல் 2005 வரை எல்லையில் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை. ஆனால், 2006 முதல் பாகிஸ்தான் மீண்டும் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.கடந்த 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின், பாகிஸ்தானுடன் பகைமை மறந்து நட்புக்கரம் நீட்டினார். மீண்டும் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை, அவரது சொந்த பூமிக்கே தேடிச் சென்று நட்பு பாராட்டினார். ஆனால், அதற்குப்பின், இன்று வரை பாகிஸ்தான் செய்தது என்ன?

நாங்க ரெடி; நீங்க ரெடியா!

சிம்லா ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ நோக்கம், இரு நாடுகளும் இதுவரை தங்கள் உறவுகளைச் சீர்குலைத்துள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான். இந்த ஒப்பந்தம், போரின்போது பாகிஸ்தானில் இந்திய ராணுவம் கைப்பற்றிய, 13 ஆயிரம் சதுர கி.மீ.,க்கும் அதிகமான நிலத்தைத் திருப்பித் தந்தது.மேலும், சிம்லா ஒப்பந்தத்தில் முதலில் குறிப்பிடப்பட்ட கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இப்போது நிராகரித்துவிடுமா? ஒரு வேளை பாகிஸ்தான் அதை மீற முயன்றால், இந்தியா கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைப் புறக்கணித்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் (பி.ஓ.கே.,) முழு பகுதிகளையும் உரிமை கொண்டாடலாம். அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடும். சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானுக்கு சொந்த காலில் சூனியம் வைத்த கதை ஆகி விடக்கூடாது.

அமைதி வழி எங்கே?

கடந்த 1971ம் ஆண்டு, இந்தியாவின் ராணுவ நடவடிக்கையால், பாகிஸ்தானை உடைத்து, வங்கதேசம் எனும் தனி நாடு உருவானது. இந்திய பிரதமர் இந்திராவுக்கும், பாக்., பிரதமர் சுல்பிகர் அலி புட்டோவுக்கும் இடையே மூன்று நாட்கள் பேச்சுக்குப் பின், 1972 ஜூலை 2ல் சிம்லாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மாஸ்கோவில் இந்திய மற்றும் பாகிஸ்தான் துாதர்கள் வாயிலாக சோவியத் யூனியன் ஆயத்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது. வங்கதேசத்தை ஒரு இறையாண்மை கொண்ட அமைப்பாக முதல் முறையாக அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தில், இரண்டு முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட்டன. 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் போர்க்கைதிகளை, அந்நாடு திரும்பப் பெறுவது; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்குப் பிந்தைய உறவுகளின் எதிர்காலம் சுமுகமாக இருப்பது முதல் அம்சம். இரண்டாவதாக, ஜம்மு- - காஷ்மீர் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பது தான். 'இருதரப்பு பேச்சுவார்த்தை வாயிலாகவோ அல்லது இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட வேறு எந்த அமைதியான வழிகளிலோ, வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் இதுவரையும் அமைதி வழியில் சென்ற வரலாறு இல்லை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mr Krish Tamilnadu
ஏப் 28, 2025 12:51

இந்திரா அவர்கள் ஜாம்பவான். அன்றைய காலகட்டத்தில் அவர் சரியாக தான் செயல்பட்டு உள்ளார். அப்போது மத உணர்வு, மொழி உணர்வு அதிகம் இருந்த காலகட்டம். போரில் வென்ற பகுதியில் அதிகாரம் செலுத்துவதும், போர் கைதிகளை தண்டிப்பதும் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்த கூடும் என, அண்டை நாட்டுகள் தொல்லைகள் இல்லாமல் இருந்தால் போதும் என்ற அளவில் இறங்கி தான் உடன்படிக்கை மேற்கொண்டு உள்ளார். ஆனால் இன்றைய காலகட்டம் வேறு. உலக நாடுகளில் சிறுபான்மையினர் எப்படி நடத்த படுகின்றனார். இந்தியாவில் எப்படி நடத்தப்படுகின்றனார் என புரிந்து வைத்து உள்ளனார். பதவிகள் வகிக்கின்றனார். அவர்களின் நலன்களும் எந்த பாரபட்சமும் இல்லாமல் தேவைகளும் பூர்த்தி செய்ய படுகின்றனர். இந்தியர் என்ற உணர்வோடு முழு மனதுடன் அமைதியாக வாழ பரிபூரணமாக விரும்புகிறார்கள். இந்திய அரசாங்கம் இந்திய உணர்வில் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றும் கொள்ளும் மக்களாக இந்திய பரிபூரணமாக மாறி விட்டது. நமது குரலும் உலக அளவில் தனித்துவமாக ஒலிக்க, வல்லமை பொருந்திய நாடாக மாற, நட்பு இல்லை உன் பாதை தனி, என் பாதை தனி என்பன சரியான முடிவுகளே.


Rasheel
ஏப் 28, 2025 11:11

சிம்லா ஒப்பந்தம் கையெழுத்து முடிந்தவுடன் பாக்கிஸ்தான் பிரதமர் பூட்டோ சொன்னது. "அந்த பொம்பளையை இந்திரா காந்தி நான் ஏமாற்றி விட்டேன். இந்த ஒப்பந்தத்திற்கு நமது நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்காது". இதை அவரது இள நிலை தூதுவருடன் சொல்லியதை அனில் டோக்ரா என்னும் இந்திய தூதுவருடன் பாகிஸ்தானி சொல்லி பெருமை பட்டது இப்போது வெளி வந்துள்ளது. இது அவர்கள் மத வழக்கப்படி அல் தாக்கிய என்று பெயர். அடுத்த மதத்து காரனை ஏமாற்ற போடும் திட்டம் என்று பெயர்.


Amar Akbar Antony
ஏப் 28, 2025 09:43

மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அது பங்களாதேசத்தின் குடிமகன்கள் அகதிகள் எல்லோரையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உடனே வெளியேற்றவேண்டும். ஒருபயலையும் விடக்கூடாது.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 28, 2025 08:18

சிம்லா ஒப்பந்தத்தை நீக்கிய இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு நன்றி, நாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டும் மீட்டால் போதாது லாககூர், ராவல்பிண்டி, சிந்துவின் ஒரு பகுதியை மீட்கவேண்டும் இது தான் எதிர்கால அமைதிக்கும் நம் தேச வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கு நல்லது. பாகிஸ்தான் பலவீனமானால் நாம் முழுகவனம் சீனா மீது செலுத்தலாம்.


GMM
ஏப் 28, 2025 08:12

பாகிஸ்தான்,வங்கதேசம் இந்திய பகுதிகள். இந்திய கட்டுபாட்டில் இல்லை என்றால், தீவிரவாதிகள் பயிற்சி இடமாக மாறி விடும். ஒப்பந்தம் எதுவும் பலன் தராது. உலக நாடுகள் ஆதரவு பெற வேண்டும். பிஜேபி ராஜ தந்திரம் முன் அறிவது கடினம். வலுவான, நிலையான முடிவாக இருக்கும். இந்திய குடிமக்கள் முழு ஒத்துழைப்பு தேவை.


Firstindyan
ஏப் 28, 2025 08:02

நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.


Iniyan
ஏப் 28, 2025 07:49

எந்த காலத்திலும் அமைதி மார்கதினர் பிறருடன் போடும் ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை. அது அவர்கள் மார்க நெறி.


naranam
ஏப் 28, 2025 07:27

எந்த விதமான தொலை நோக்கும் இல்லாத நேரு நம் நாட்டுக்குச் செய்த தீமைகள் பலப் பல. இந்திராவும் கோட்டை தான் விட்டு விட்டார்.


குருமாவளவன் நகர், திம்மவாலனுபுரம்
ஏப் 28, 2025 07:13

பாகிஸ்தானியர்களே, சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், அந்த 93000 போர் கைதிகளை எங்களுக்குத் திருப்பித் தாருங்கள். நாங்கள் யாசகமாக உங்களுக்குக் கொடுத்த நிலத்தையும் திருப்பித் தாருங்கள். சிம்லா ஒப்பந்தம் இல்லாததால், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கல்வியின் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.குறைந்தபட்சம் ஷிம்லா உடன்படிக்கையையாவது படியுங்கள்.


Chandrasekaran
ஏப் 28, 2025 06:55

13500 ச.அடியை முதலில் இந்தியா எடுத்துக்கொள்ள வாய்ப்பு.?


Palanisamy T
ஏப் 28, 2025 10:05

ஒப்பந்தத்தை தாங்களே முன் வந்து ரத்து என்று சொல்லி விட்டார்கள். நல்ல வாய்ப்பு மண்ணை மீட்டுக் கொள்ள வேண்டியதுதானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை