| ADDED : டிச 29, 2025 05:48 PM
புதுடில்லி: ராணுவத்தினரின் திறனை வலுப்படுத்துவதற்கு என சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இன்று டில்லியில் நடந்த கூட்டத்தில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான தளவாடங்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=44zv98xz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிச., 29 அன்று நடந்த கூட்டத்தில்பீரங்கி படைப்பிரிவுக்கான வெடிமருந்து அமைப்பு, இலகு ரக ரேடார்கள். பினாகா ராக்கெட் அமைப்புக்கு வெடிமருந்துகள் மற்றும் இந்திய ராணுவத்துக்காக ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்பு எம் கே- எச் ஆகியவற்றை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்திய கடற்படைக்கு பொல்லார்ட் புல் டக் படகுகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது இந்திய கடற்படையால் பயன்படுத்தப்படும் ஒரு வகை இழுவைப்படகு ஆகும், இது பெரிய கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்துவதற்கும், விடுவிப்பதற்கும் உதவுகிறது, மேலும் இது உள்நாட்டிலேயே 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. மேலும், HF SDR எனப்படும் அதிக அதிர்வெண் கொண்ட ராணுவ ரேடியோ ஆகும். இதனை இலகுவாக இருப்பதுடன், எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது.தானியங்கி புறப்பாடு மற்றும் தரையிறங்குவதை பதிவு செய்யும் அமைப்பு, அஸ்த்ரா எம்கே 22 வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை, தேஜாஸ் போர் விமானத்துக்கு தேவையான உபகரணங்கள் ஆகிய தளவாடங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.