உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு பூஜைகளுக்கு பெறப்பட்ட மனுக்களில் 36 மட்டுமே நிராகரித்ததாக தமிழக அரசு பதில்

சிறப்பு பூஜைகளுக்கு பெறப்பட்ட மனுக்களில் 36 மட்டுமே நிராகரித்ததாக தமிழக அரசு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 22ம் தேதி நடந்தது. நாடு முழுதும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில், சிறப்பு பூஜைகள், கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாய்மொழி தடை பிறப்பிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அனுமதி இல்லை

இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த வினோஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த, 22ம் தேதி காலையில் இந்த வழக்கை, நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது.அப்போது, நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.'ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அங்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தரப்படவில்லை என்று கூறப்படுவது அராஜகமான போக்கு. அப்படி பார்த்தால், நாட்டில் எந்த இடத்திலும், எந்த மதத்தினராலும் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது' என, அமர்வு கூறியிருந்தது.சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் எத்தனை விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பதை காரணத்துடன் தெரிவிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டிருந்தது.இதன்படி, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

நிலுவை

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தமிழகம் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு, 288 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 252 மனுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.அதே நேரத்தில், சட்டம் - -ஒழுங்கு பிரச்னை, உள்ளூர் நிலவரம் காரணமாக, 36 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் மனுவை தாக்கல் செய்ய அனுமதி கேட்டார். ஆனால், அதை அமர்வு ஏற்கவில்லை. 'அது ஒரு நாள் நிகழ்ச்சி. இந்த விவகாரத்தில் நாங்கள் தகுந்த உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளோம்' என, அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜன 30, 2024 12:32

ஆலயங்களிலிருந்து நாத்திக மதசார்பற்ற அரசை வலுக்கட்டாயமாக வெளியேற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஹிந்துக்கள்???? தள்ளப்படுகின்றனர்.


M S RAGHUNATHAN
ஜன 30, 2024 07:46

252 கோவில்களிலும் எப்போது அனுமதி கேட்கப் பட்டது, எப்போது கொடுக்கப்பட்டது (அதாவது நீதி மன்றங்களுக்கு மனுதாரர்கள் சென்ற பின்பா, நீதி மன்றம் உத்தரவு கொடுத்த பின்பா என்று தெளிவு படுத்தப் படவேண்டும்). இதை மேம்போக்காக நீதி மன்றங்கள் கையாளக்.கூடாது என்பதே கோரிக்கை.


M S RAGHUNATHAN
ஜன 30, 2024 07:43

@ kasimani பாஸ்கரன் HRCE சட்டமே அதைத்தான் சொல்கிறது. ஆனால் ஒரு முறை கூட நீதி மன்றம் ஏன் நிரந்தரமாக HRCE கோயில்களில் நிர்வாகம் செய்கிறது என்று கேள்வி கேட்க வில்லை. HRCE விடம் நீதி மன்றம் கேட்க வேண்டிய கேள்வி: எந்த முறைகேடுகளை சுட்டி காட்டி கோயிலின் நிர்வாகத்தை HRCE எடுத்துக் கொள்கிறதோ, அந்த குறைகளை களைந்தபின் ஏன் வெளியேறவில்லை என்று கேட்பதில்லை? இது தான் நீதி பரிபாலனமா? நீதிபதிகள் யோசிக்க வேண்டும்.


ராஜா
ஜன 30, 2024 06:21

கோவில் வழிபாட்டில் மக்களுக்கு இருக்கும் அடிப்படை வழிபாட்டு உரிமைகளை நீதிமன்றம் இங்கு தெளிவுபடுத்த வேண்டும். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் இடங்களில் உள்ள ஹிந்து கோவில்களை என்ன செய்ய போகிறது இந்த அரசு? அது சரி, ஏற்கனவே நாடு முழுவதும் இருக்கும் சிறுபான்மையினர் எதன் அடிப்படையில் அவர்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களை சுதந்திரமாக கொண்டாடி வருகின்றனர்? மக்களிடையே மதத்தை வைத்து பிரிவினை செய்து அரசியல் ஆதாயம் தேடும் நரித்தந்திரம் தான் திமுகவினுடையது. உத்திர பிரதேசத்தில் கூட இஸ்லாமியர்கள் கணிசமாக இருகிறார்கள். ராமர் கோவிலுக்கு அந்த அரசால் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாடு அரசால் அது முடியவில்லை என்றால் இது யாருக்கான அரசு?


Duruvesan
ஜன 30, 2024 05:01

விடியலுக்கு ஓட்டு போடும் ஹிந்து அடிமைகள் வாழ்க


Kasimani Baskaran
ஜன 30, 2024 00:19

கோவில்களில் பூஜை செய்ய இவர்கள் யார் அனுமதி கொடுக்க? கோவில் நிர்வாகத்தில் ஈடு பட்டு ஐந்தாண்டுகளில் நிர்வாகத்தை சரி செய்து விட்டு நடையைக்கட்ட வேண்டும். அதற்கு மேல் இருப்பது சட்டத்து புறம்பாகவே என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 29, 2024 23:39

அந்நிய மத திருட்டு திராவிட கழிசடைகள் ஹிந்து மக்களை திப்பு சுல்தான் / அவுரங்கஸீப் காலத்தை போல அடக்குமுறை கட்டவிழ்த்து உள்ளாள். அந்த காட்சிகளில் இருக்கும் ஹிந்துக்கள் உப்பு போட்டு சோறு தின்கிறவர்களாக இருந்தால் வெளியே வரவேண்டும் அந்த காட்சிகளை சார்ந்த லோக்கல் தலைவர்கள் கோவில் பக்கம் வந்தால் விரட்டி அடிக்க வேண்டும். செய்வர்கள் ஹிந்துக்களே? திப்பு சுல்தான் காலத்தில் ஆந்திராவில் இருந்து நாயக்க மன்னர்கள் தமிழக ஹிந்துக்களை காக்க, மதுரை திருப்பதி கோவில்களை மீட்க வந்தார்கள். தற்போது ஹிந்துக்களை காக்க இங்கேயே பிறந்த நமது அண்ணாமலை வந்திருக்கிறார். தமிழக இந்துக்கள் இப்போதாவது கண் விழித்து நிகழ் காலத்தை பார்க்க வேண்டும். இல்லை என்றால் பாக்கிஸ்தான், காஷ்மீர் ஹிந்துக்களை போன்ற நிலைமை தான் நமது அடுத்த தலைமுறைக்கு, தற்போதே தொன்னூறு சதவிகித அரசு பதவிகளில் மதம் மாறிய கிருத்துவர்கள் ஹிந்து பெயரில் ஆட்சி செய்கிறார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை