உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ; விசாரணையில் அம்பலம்!

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ; விசாரணையில் அம்பலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் அம்பலமானது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.https://www.youtube.com/embed/MjkNUX3UcU8பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில், மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என்பது தெரியவந்துள்ளது.பயங்கரவாதி ஹாசிம் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.,யை சேர்ந்தவன். ஹாசிம் மூஸாவை லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் உளவு அமைப்பினருக்கு உள்ளது.இவன் காஷ்மீரில் நடந்த 3 பயங்கரவாத தாக்குதல்களில் பங்கேற்றுள்ளான். பஹல்காம் தாக்குதல் விசாரணையில், மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும், காஷ்மீரில் நடந்த முந்தைய பயங்கரவாத தாக்குதலுக்கு ஹாஷிம் மூசா பங்கு அதிகம் என மூத்த அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தமிழ்வேள்
ஏப் 29, 2025 19:50

தற்போது ஒரு வீடியோ பார்த்தேன். ஹமாஸ் தீவிரவாதி ஒருவனை இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரோடு ஆசிட் டேங்க் ல் இறக்கி வெளியே எடுக்கின்ற போது வெறும் எலும்பு கூடு மட்டுமே வருகிறது..அதே மாதிரி தண்டனையை பாக்.கொலைகார பயங்கரவாதி கும்பலுக்கு அளித்தால் இங்கு பயங்கரவாதம் தேச துரோகம் நன்றாக கட்டுக்குள் வரும்.. கொடூரமான ஒன்றாக இருந்தாலும் மனித தன்மையற்ற பயங்கரவாதி கும்பலுக்கு அதேபோல் மனித தன்மை அற்ற தண்டனைகள் தான் சரிவரும்.புத்த சமண கோட்பாடுகள் அஹிம்சை ஆகியவை சரிவராது.


sundar
ஏப் 29, 2025 15:10

இது சிறுபான்மை சமூகத்தின் மீது வேண்டுமென்றே போடப்படும் பழி. பாஜக அளித்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டனர்.பழியை சிறுபான்மையினர் மீது போடுகின்றனர்.அவர்கள் மதம் என்றுமே அமைதி மற்றும் சகோதரத்துவம் என்னும் கோட்பாடுகளை உடையது- இப்படிக்கு-குறுமா, சைமாண்டி, டோல்கேட் ,கான் க்ராஸ், தீயமுக மற்றும் உண்டியல் பிச்சைக் கம்மிகள்.


ameen
மே 01, 2025 12:57

வெயில் அதிகமா?


V Venkatachalam
ஏப் 29, 2025 14:31

அதான் ஆள் யாருன்னு தெரிஞ்சி போச்சே. அவன் ஏன் இன்னும் உயிரோடு இருக்கான்? அபிநந்தனை இன்னேரம் அனுப்பியிருக்கணுமே..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 14:09

இந்திய ஜிஹாதிகள் ஏகனை பிரார்த்திப்பார்கள் அவன் தப்பிக்க ........


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 13:57

காஷ்மீரில் இருந்து ஏற்கனவே வெளியேறிய பண்டிட்டுகள் மற்றும் வெளிமாநிலத்தவரை அதிகம் மீள்குடி / குடியேற்ற வேண்டும் .....


Godfather_Senior
ஏப் 29, 2025 13:39

இனி என்ன, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூஸாவின் வீட்டையும் அவன் நடமாடும் இடங்களையும் குறி வைத்து காத்திருப்பார்கள் அவன் வெளியில் நடமாடவே அஞ்சி தாவூத் போல உள்ளேயே முடங்கி கிடப்பான்.


Senthoora
ஏப் 29, 2025 13:38

அவர்களின் படம் போட்டு அடையாள படுத்தாது, அவனை இந்தியாவுக்கு ஒப்படைக அழுத்தம் கொடுக்கணும். இல்லையேல் அதிரடி காட்டணும்.


VSMani
ஏப் 29, 2025 12:21

மக்களே யாரும் காஷ்மீர் பக்கம் போகாந்தீங்க.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 29, 2025 12:20

பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் உள்நாட்டு துரோகிகளை முதலில் தண்டித்து நாடு கடத்த வேண்டும், பாம்புக்கு பாவம் பாக்கும் கயவர்கள் நம் நாட்டில் அதிக உள்ளனர். ஈன பிறவிகளான பாகிஸ்தானுக்கு ஆதரவு பாதுகாப்பு கொடுக்கும் சமூக விரோதிகளையும் கலையெடுக்க வேண்டும்.


Svs Yaadum oore
ஏப் 29, 2025 11:28

விடுதலை போராளிகளை இப்படி பயங்கரவாதி என்று கூறுவதை விடியல் திராவிடனுங்க என்றும் எப்போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ...இப்படி பயங்கரவாதி என்று கூறினால் இங்குள்ள விடியல் திராவிடனுங்க பாகிஸ்தான் சென்று அங்கே செட்டில் ஆகி பாகிஸ்தானை ராமசாமி மண்ணாக மாற்றி விடுவார்கள் ...விடியல் திராவிடனுங்களுக்கு மானம் ரோஷம் உண்டு ...இந்தியாவிலிருந்து வெளியேறி விடுவார்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை