உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் ரூ.8 கோடியை பதுக்கி எடுத்துவந்த லாரி; பணம் பறிமுதல்; 2 பேர் கைது

ஆந்திராவில் ரூ.8 கோடியை பதுக்கி எடுத்துவந்த லாரி; பணம் பறிமுதல்; 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் பைப் ஏற்றி வந்த லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி அதில், ரூ.8 கோடி பணத்தை பதுக்கி எடுத்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் மூன்று கட்டங்கள் நேற்று முன்தினத்துடன் (மே 7) முடிவடைந்தன. அடுத்தக்கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eqsmsd1l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது ஒருபுறம் இருக்க, பறக்கும் படையினரும், போலீசாரும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிக்காபாடு சோதனைச்சாவடியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பைப்களை ஏற்றிவந்த லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி அதில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட ரூ.8 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தை லாரியில் எடுத்துவந்த 2 பேரை கைது செய்தனர். இந்த பணம் ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மே 09, 2024 12:53

இப்படி நாடுமுழுவதும் பறிமுதல் செய்யப்படும் பணம் அரசுக்கு அரசு கஜானாவிற்கு செல்கிறதா? அல்லது யாராவது ஆட்டை போடுகிறார்களா? விவரம் கொடுத்தால் நல்லது


duruvasar
மே 09, 2024 12:47

இதை, திராவிட மாடலை இந்தியா முழுவதும் எடுத்து செல்வோம் என்ற கூறியதின் ஒரு பகுதியாக பார்க்கலாம்


Natarajan Ramanathan
மே 09, 2024 12:22

குண்டூரில் ஒரு ஓய்வு பெட்ற போலீஸ் அதிகாரி முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பினாமி ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததால் இந்த பினாமி திடீர் பணக்காரன் ஆகிவிட்டார்


Kasimani Baskaran
மே 09, 2024 12:14

மாடல் கோட்பாடுகள் நாடு முழுவதும் பரவுவது பணநாயகம் மூலம் ஜனநாயகத்தை வென்றதையே காட்டுகிறது குற்றுயிரும் குலையுயிருமாக ஜனநாயகம் கல்லரைக்கு போய்க்கொண்டு இருக்கிறது


N Sasikumar Yadhav
மே 09, 2024 11:29

இதுதான் திராவிட ஃபார்முலா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி