உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்: விமானப்படை தளபதி பேச்சு

இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்: விமானப்படை தளபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ' ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்,'' என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் சமீபத்தில் கொள்முதல் செய்யப்பட்டவை. அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டை சேர்ந்தது. ஒன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம். அல்லது உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கலாம். இந்த டிரெண்ட் வரும் காலங்களிலும் தொடர வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cmbx6v73&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமானப்படை தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகள் குறித்த தகவல் எங்களுக்கு வழங்கப் பட்டன. அவற்றை துல்லியமாக தாக்கினோம். எதிரிகள் போரை நிறுத்த மறுத்து நம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினோம். அவர்களின் பல தளங்கள் அழிக்கப்பட்டன. ரேடார், கட்டுப்பாட்டு மையம், போர் விமானங்கள் ஆகியன சேதம் அடைந்தன.பாகிஸ்தான், பல விமானப்படை தளங்களை மூடினாலும், வான்வெளியை மூடவில்லை. லாகூரில் பயணிகள் விமானம் தரையிறங்கவும், கிளம்பிச் செல்லவும் அனுமதி வழங்கியது. இது நமக்கு பெரிய சவாலாக இருந்தது. இதற்கு மத்தியில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களையும், டிரோன்களையும் ஏவியது. இது குறித்த தகவல் நமக்கு கிடைத்தது. இருப்பினும், எவ்வளவு சவால் வந்தாலும் அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தை சாராதவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். போரில் வெற்றி பெறுவதற்கு டிரோன்கள் மட்டும் போதாது. நீண்ட தூரம் மற்றும் கனரக ஆயுதங்கள் தேவை. நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் விமானங்களும் உள்ளன.அரசியல் தலைமை எங்களுக்கு தெளிவான உத்தரவுகளை வழங்கியது. எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. திட்டங்களை நிறைவேற்ற முழு சுதந்திரம் அளிக்கப் பட்டது. உண்மையில் ஒருங்கிணைப்பு இருந்தது. முப்படை தளபதிகள் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து திட்டங்களை வகுத்தனர். இதில் முப்படை தலைமை தளபதி மற்றும் மற்ற அமைப்புகளும் சேர்ந்து கொண்டன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முக்கிய பங்காற்றினார். இது தான் வெளிவந்த நேர்மறையான பாடம்.பாகிஸ்தானின் பாலகோட்டில் 2019ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போது விமானப்படை பல கேள்விகளுக்கு உள்ளானது. ஆனால், ஆப்பரேஷன் சிந்தூரில் சரியான அரசியல் உறுதி, சரியான அரசியல் தலைமை மற்றும் படைகளுக்கு கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படவில்லை. இன்று ரஷ்யா - உக்ரைன் இடையேயும், இஸ்ரேல் போரும் நடந்து வருகிறது. ஆண்டுகள் கடந்தாலும் அது நீடிக்கிறது. இதனை முடிக்க வேண்டும் என யாரும் நினைக்காததே அதற்கு காரணம். ஆனால், நாம் விரைவில் போரை நிறுத்திவிட்டோம். இன்னும் கொஞ்ச நாள் நீடித்து இருக்க வேண்டும் என சிலர் கூறினர். ஆனால், நமது நோக்கம் என்ன? நமது நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரானது. அவர்களை தாக்கினோம். நமது நோக்கம் நிறைவேறிய பிறகு தாக்குதலை ஏன் நிறுத்தக்கூடாது?. அதனை ஏன் தொடர வேண்டும்?. எந்த மோதலுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், நாம் அடுத்த கட்டத்திற்கு தயாராவது தடைபடுவதுடன், பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கும். இதனையே உலக நாடுகள் மறந்துவிட்டன என நினைக்கின்றேன். போரை துவக்கிய போது நமது இலக்கு என்ன என்பதை அந்த நாடுகளுக்கு தெரியவில்லை. தற்போது அவர்களின் இலக்கு மாற துவங்கிவிட்டது. அவர்களுக்கு இடையே ஈகோ தலைதூக்குகிறது. ஒரு மோதலை விரைவில் எப்படி முடிக்க வேண்டும் என இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Senthoora
செப் 20, 2025 07:23

உலக நாடுகளுக்கு தெரியும்


naranam
செப் 20, 2025 04:30

இப்படி வாய்க்கு வந்தபடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்? நடவடிக்கை சிந்தூர் முடிந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. இன்றும் அதைப் பற்றியே பேசுவதால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. இசுலாமிய நாடுகளுக்கு பாகிஸ்தான் தன் அணு ஆயுதங்களை அளிக்கப் போவதாக ஒப்பந்தம் போட்டு மிரட்டி வருகிறது.. மேலும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் நேட்டோ அமைப்பு போன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளதைப் பற்றியும் அதை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதை பற்றியும் ஆலோசனைகள் மேற்கொண்டு அதன் படி அடுத்த நடவடிக்கைக்குத் தயாராக வேண்டிய அவசியத்தையும் பற்றி பேசுங்கள்.


Prabu
செப் 19, 2025 22:42

இந்தியாவுக்கு ஒரு எதிரி . ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் அனைத்தும் எதிரி . அங்கே ரஷ்யாவை அழிப்பதற்கான நேரம் பார்த்து காத்துள்ளனர் .சொந்தமாக ஆயுதம் தயாரிக்கும் ரஷ்யா எப்படி சும்மா இருக்கும் . இங்கே பிரச்சனை இருந்தாலும் போர் செய்வதற்கான பொருளாதாரம் இரு நாடுகளிடம் இல்லை


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 19, 2025 21:17

சரியாக சொல்லியிருக்கிறார். தற்காலத்தில் போர் துவங்குவது எளிது. அதை நிறுத்துவது கடினம். வேண்டாத, சுயநலமிகளின் தலையீடுகள், புதிய எதிரிகள், எதிர்பாராத தாக்குதல்கள் தோன்றுவதற்கு முன் விரைவில் முடிந்த அளவு இலக்குகளை தாக்கி, வெற்றிகளை குவித்து, சட்டென்று போர் நிறுத்தம் அறிவித்து விடுவதுதான் சரியான செயல். இம்முறை இந்தியா புத்திசாலிகளின் கையில் இருக்கிறது என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே.


Palanisamy Sekar
செப் 19, 2025 21:10

எவ்வளவு தெளிவான பேச்சு. நிச்சயம் உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து போர் பற்றிய தெளிவான நோக்கத்தை கண்டுகொண்டு தாக்குதலை நடத்தவேண்டும். அதனால் பொருளாதார சிக்கல்கள் குறையும், செலவினங்கள் குறையும். அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை சுமுகமாக தொடரும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நமது இலக்கை அடைந்ததும் நிறுத்திவிட்டோம். பாதிப்புக்கு உள்ளான பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிந்து போனது. உலகவங்கியிடம் கடன் வாங்கி சுமையை பெருக்கிக்கொண்டன. தீவிரவாதத்தால் அருமையான சிந்துநதிநீரை இழந்துவிட்டது. ஆனால் இந்தியாவின் புகழ் உலகெங்கும் உச்சத்தை தொட்டுவிட்டன. நமது ராணுவ வலிமையை உலகிற்கு உணர்த்திய முப்படை தளபதிகளுக்கும் வீரர்களுக்கும், அவர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கிய மோடிஜியின் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்.


m.arunachalam
செப் 19, 2025 20:40

சுய தம்பட்டம் கேடு விளைவிக்கும் . இழப்புகளையும் உண்டாக்கும் . அடக்கம் , தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பயன் தரும் .


M.Sam
செப் 19, 2025 20:25

எதை பற்றி சனாதன தர்மத்தை பற்றியா ??


Palanisamy Sekar
செப் 19, 2025 21:13

அப்பத்துக்கு தாய்மத்தை தூரப்போட்ட உம்மை போன்ற தேசவிரோதிகளை இனியேனும் அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். முப்படை அறிவாற்றலை பற்றி தெளிவாக பேசிய தளபதியின் அறிவாற்றலை புரிந்துகொள்ளாத நீங்கள் எப்போதுமே சனாதனம் பற்றித்தான் சிந்திப்பாயா


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 19, 2025 21:19

குச்சியில் தொங்குபவனை பிடித்து தொங்குபவர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியாததில் ஆச்சரியம் இல்லை.


புதிய வீடியோ