உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால்நடை தீவன நிறுவனத்தில் திருட்டு: 6 பேர் கைது

கால்நடை தீவன நிறுவனத்தில் திருட்டு: 6 பேர் கைது

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு கொட்டாமுட்டி பகுதியில் 'பெட்டர் பீட்ஸ்' என்ற கால்நடை தீவன நிறுவனம் அமைக்கும் பணி நடக்கிறது. இம்மாதம் நிறுவனத்தின் துவக்க விழா நடக்கவுள்ளது.இந்நிலையில், 2 டன் எடையுள்ள இயந்திரங்கள், மோட்டார்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட, 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து நிறுவன உரிமையாளர் வாளையார் போலீசில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையில் சிறப்பு படை அமைத்து விசாரணை நடந்தது. அங்குள்ள, சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், கடந்த மாதம் 9ம் தேதி முதல் இம்மாதம் 2ம் தேதி வரையிலான நாட்களில், நிறுவனத்தில் பொருட்கள் திருட்டு போயுள்ளது.பாலக்காடு, புதுச்சேரி வேனோலி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி 18, அவரது சகோதரர் மாரிமுத்து, 23, ஆலமரம் பகுதியை சேர்ந்த தங்கபிரேம், 31, கஞ்சிக்கோடு சுள்ளிமடை பகுதியைச் சேர்ந்த எட்வின் ராஜ், 20, கொட்டாமுட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 28, அட்டப்பள்ளத்தை சேர்ந்த ரஞ்சித், 22, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பாலக்காடு புதுச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி