உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்த தடையில்லை; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்த தடையில்லை; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரி, அ.தி.மு.க., எம்பி சிவி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ''தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் புகைப்படம் இடம் பெற அனுமதி அளித்து, அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=owqk46fd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், அரசு துவங்கும் திட்டங்களில், முன்னாள் முதல்வர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 06) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி வாதாடினர்.

திமுக வாதம்

''அரசியல் தலைவர்களின் பெயரில் நாடு முழுவதும் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அரசியல் ரீதியானது'' என திமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

சரமாரி கேள்வி

பின்னர் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பற்றி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்த மூன்றே நாளில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்?* தலைவர்கள் பெயரை வைக்கக் கூடாது என்றால் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.* ஸ்டாலின் பெயரிலான திட்டத்தை மட்டும் சிவி சண்முகம் எதிர்ப்பதை ஏற்க முடியாது.* ஒருவரை மட்டும் எதிர்ப்பது ஏன்?* அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது. அரசியல் மோதலை தீர்க்க, நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

தள்ளுபடி

பின்னர், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதை எதிர்த்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த, அனுமதி அளித்த நீதிபதிகள், ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சண்முகத்துக்கு உத்தரவிட்டனர்.

ஒரு வாரத்திற்குள்...!

ஒரு வாரத்திற்கு அபராத தொகை ரூ.10 லட்சத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 79 )

Natarajan Ramanathan
ஆக 07, 2025 09:41

எந்த வழக்காக இருந்தாலும் முப்பது நாற்பது வருஷங்கள் ஆனாலும் தீர்ப்பு சொல்லாத ...களுக்கு எப்போது அபராதம் விதிப்பார்கள்?


Durai Kuppusami
ஆக 07, 2025 08:54

10 லட்சம் மீறி பேசன் 20 லட்சம் எனறு மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன இது உண்மையா அப்படி என்றால் மற்ற தேங்கி கிடக்கும் வழக்குகளுக்கும் இந்த வேகத்தில் இல்லை இந்த லட்சணத்தில் ஜனாதிபதிக்கே கேள்வி வேறு....விளங்கிடும் இந்தியா


xxxx
ஆக 06, 2025 23:03

ஸ்டாலின் அரசு .... தமிழ்நாடு இல்லை ஸ்டாலின் நாடு என்று மாற்றப்படும் ....


V RAMASWAMY
ஆக 07, 2025 11:10

இவ்வளவு குறுகிய பெயரா? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நாடு, தேவைப்பட்டால் முதலில் பெரியார் ஈ வே ராமசாமி நாயக்கர் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.


ஆரூர் ரங்
ஆக 06, 2025 22:20

நீதிக்கு ஒரு தகைசால் விருது பார்சல்.


Oviya Vijay
ஆக 06, 2025 22:06

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் முதலமைச்சர் பெயரை அரசு திட்டங்களுக்கு உபயோகப் படுத்தக் கூடாது என தடை விதித்த போது அந்த செய்தியில் நான் கீழ்கண்டவாறு பதிவிட்டிருந்தேன்... கொரோனா காலத்தில் தடுப்பூசி போடப்பட்டதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சர்டிஃபிகேட்டில் பிரதமர் போட்டோ இடம்பெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கலான போது அதற்கு உச்ச நீதிமன்றம் நாட்டில் பதவியிலிருக்கும் பிரதமரின் போட்டோ இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று தீர்ப்பளித்தது... அதே போல் இவர்கள் மேல்முறையீடு செய்வார்களேயானால் இந்த தீர்ப்பு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என எண்ணுகிறேன்... இவ்வாறு பதிவிட்டிருந்தேன்... என் கணிப்பு தவறவில்லை என மகிழ்கிறேன்... அதே போல் தான் 2026 தேர்தலிலும் என்னுடைய கணிப்புகள் தவறப்போவதில்லை... அந்நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...


Barakat Ali
ஆக 06, 2025 21:29

உச்சத்தையே விலைக்கு வாங்கிருவோம்ல ???? நாங்க வேற லெவல் ........


Oviya Vijay
ஆக 06, 2025 20:31

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தடைவிதித்த போது அந்த செய்தியில் நான் கீழ்கண்டவாறு பதிவிட்டிருந்தேன்... கொரோனா காலத்தில் தடுப்பூசி போடப்பட்டதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சர்டிஃபிகேட்டில் பிரதமர் போட்டோ இடம்பெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கலான போது அதற்கு உச்ச நீதிமன்றம் நாட்டில் பதவியிலிருக்கும் பிரதமரின் போட்டோ இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று தீர்ப்பளித்தது... அதே போல் இவர்கள் மேல்முறையீடு செய்வார்களேயானால் இந்த தீர்ப்பு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என எண்ணுகிறேன்... இவ்வாறு பதிவிட்டிருந்தேன்... என் கணிப்பு தவறவில்லை என மகிழ்கிறேன்... அதே போல் தான் 2026 தேர்தலிலும் என்னுடைய கணிப்புகள் தவறப்போவதில்லை... அந்நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...


நசி
ஆக 06, 2025 20:08

உச்ச அநீதிமன்றம் அறிவாலயத்திலிருந்து இயங்குகிறது ..செந்தில் பாலாஜி தம்பி 2 வருடம் தலைமறைவாக எங்கு இருந்தார் என்று கேட்கவில்லை ஆனால் அவருககு அமெரிக்காவில் சிகிச்சைக்கு ஏற்பாடு என்ன என்று சிபிஐ கேட்கிறது பொன்முடி பேச்சு, அனைத்து புகாரும முடிக்கபட்டது என்கிறது அரசு..எந்த நீதி மன்றம் தாமாக இந்த வழக்கை எடுத்து கொண்டதோ அதுவே நாளை பொன்முடி‌ பேசியது டப்ஸ்மாஷ் என்று சொல்லி கேஸ் நீர்த்து போக விட்டுவிடும போலிருக்கிறது.


theruvasagan
ஆக 06, 2025 20:07

கோர்ட்டோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை. கோடிக்கணக்கான வழக்குகள் வருஷக்கணக்கில் தேங்கி கிடந்தாலும் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் இந்த வழக்கை அதிஅவசரகால முன்னுரிமை அடிப்படையில் எடுத்து விசாரிக்குது பாருங்க. இல்லாட்டி தமிழ்நாட்டு பொருளாதாரமே வீழ்ந்துவிடும் என்கிற அக்கறையாலோ பயத்தாலோ. என்ன கருமமோ. நாம என்னத்தை கண்டோம்.


Anantharaman Srinivasan
ஆக 06, 2025 19:52

ஸ்டாலின் படம் பெயர் என்று குறிப்பிட்டு தனிப்பட்ட நபரை தாக்கி வழக்கு தொடுத்ததால் தான் சிவி சண்முகம் மூக்கு உடைபட்டு அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை