உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி அமைதி கிடையாது பா.ஜ., ஸ்ரீராமுலு ஆவேசம்

இனி அமைதி கிடையாது பா.ஜ., ஸ்ரீராமுலு ஆவேசம்

கதக்: 'பல நாட்களாக அமைதியாக இருந்தேன். இனி அமைதியாக இருக்க மாட்டேன்,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.கதக்கில் நேற்று அவர் அளித்த பேட்டி:பல நாட்களாக அமைதியாக இருந்தேன். இனி அமைதியாக இருக்க மாட்டேன். கட்சி மேலிட தலைவர்களிடம் அனைத்தையும் கூறுவேன். நான் பேச ஆரம்பித்தால், கட்சியின் கவுரவம் பாதிக்கப்படும். புதுடில்லிக்கு மேலிட தலைவர்களின் அனுமதி பெற்று செல்ல மாட்டேன். நான் விரும்பினால், நானே சென்று சந்திப்பேன். கட்சி எனக்கு அனைத்து வாய்ப்புகளையும் தந்துள்ளது. எனவே, கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை. கட்சியை விட்டு விலகுவதாக இருந்தால், நானே அறிவிப்பேன். அதேவேளையில், ஏழைகள், விவசாயிகள், உழைப்பாளிகள் நன்மைக்காக செயல்படுவோருக்கு ஆதரவாக இருப்பேன்.மாநில தலைவர் விஜயேந்திரா குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இதை தேசிய தலைவர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். மாநில தலைவராக விஜயபுரா மக்கள், பசனகவுடா பாட்டீல் வர வேண்டும் என்றும்; பெலகாவி பகுதி மக்கள், ரமேஷ் ஜார்கிஹோளி வர வேண்டும் என்றும்; உத்தர கன்னடா பகுதி மக்கள், அனந்த குமார் ஹெக்டே வர வேண்டும் என்றும்; ஹைதராபாத் கர்நாடகா பகுதி மக்கள், நான் வர வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். நாங்கள் கட்சி மேலிட தலைவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை