உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுபோன்ற வன்முறைகளுக்கு இடம் கிடையாது; பஹல்காம் தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் கண்டனம்

இதுபோன்ற வன்முறைகளுக்கு இடம் கிடையாது; பஹல்காம் தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர். விராட் கோலி; பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைதியும், தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும். கே.எல்.ராகுல்; காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றியே என்னுடைய எண்ணம் உள்ளது. அமைதி மற்றும் வலிமை பெற பிரார்த்திக்கிறேன்.சுப்மன் கில்;பஹல்காம் தாக்குதலை கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன். நாட்டில் இதுபோன்ற வன்முறைக்கு நாட்டில் இடம் கிடையாது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.அதேபோல, இந்திய சினிமா பிரபலங்களும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, அனுபம் கெர், கரீனா கபூர், விக்கி கவுசல், சித்தார்த் மல்ஹோத்ரா, சஞ்சய் தத், ரவீனா டன்டன், நானி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சுசில்குமார்
ஏப் 23, 2025 19:22

தேஷ்பக்தர்கள் கெளம்பிட்டாங்க...


Kulandai kannan
ஏப் 23, 2025 17:03

மௌனகுரு ரஜினி??


Suga Devan
ஏப் 23, 2025 14:34

இங்கிருக்கும் எதிர்கட்சிகளுக்கும் மற்ற நாடுகளை போல ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசபற்று வராதவரை மோடிஜியால் முழு தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. தீவிரவாதத்தை எதிர்த்து மோடிஜியால் கால முழுதும் போராட மட்டும்தான் முடியும்


TR BALACHANDER
ஏப் 23, 2025 16:31

தீவிர வாதிகளுக்கு தக்க பாடம் கிடைக்கும் .....


Sundar R
ஏப் 23, 2025 14:20

Bollywood spoiled 4 generations, whereas Kollywood has spoiled only 3 generations. Above all, the DMK has spoiled the Tamil Nadu for 5 generations. What is the material value of their opinions?


K.Nesamani
ஏப் 23, 2025 14:07

sss


arunachalam
ஏப் 23, 2025 13:24

கொஞ்சம் பொறு இன்னும் கொஞ்ச நாட்கள்ல, பாகிஸ்தானுடன் துபாயில் கிரிக்கெட் விளையாடலாம், காசு பண்ண.


venkataramanan bv
ஏப் 23, 2025 12:43

Where are the condolences from khans actors


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 12:31

அனைத்தும் தோல்வி .....


Ramesh Sargam
ஏப் 23, 2025 12:01

இந்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட பாக்கிஸ்தான் மீது ஒரு தாக்குதல்தான் அந்த நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் கருதுகிறார்கள். மக்களின் கருத்துக்கு மத்திய அரசு செவிமடுக்குமா? இல்லை வெறும் கண்டனம் தெரிவித்துவிட்டு அவரவர் வேளையில் ஐக்கியமாகிவிடுவார்களா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 11:56

தளபதி விஜய் ??


முக்கிய வீடியோ