உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,01) விசாரணைக்கு வந்தது.

அதிகாரம் இல்லை

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது. வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை. அரசின் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் உள்ளது.சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீட்டு பலன் பெறுவது பாதிக்கப்படும். வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பெற முடியாத நிலை ஏற்படும். கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
பிப் 02, 2024 01:00

கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று நீதிமன்றம் கூறுகிறது. ஆனால் அப்படி பூர்த்தி செய்யாமல் விட்டால், கல்வி நிலைய அதிகாரிகள், அப்படி எல்லாம் எங்களுக்கு எந்தவித உத்தரவும் நீதிமன்றம் வழங்கவில்லை. ஆகையால் நீங்கள் பூர்த்தி செய்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் அடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை நீதிமன்றம் கண்டிக்கவேண்டும், தண்டிக்கவேண்டும்.


பாஸ்கர் முத்துவேல்
பிப் 01, 2024 22:21

பிற்போக்கு அரசியல் செய்ய சாதி மதம் மொழி இனம் நிறம் கலாச்சாரம் அனைத்தும் தேவைப்படுகிறது


theruvasagan
பிப் 01, 2024 22:08

சாதி மதம் இல்லாதவங்க சமூகம்னு தனியா இன்னொரு பிரிவு உருவாகிடும். அதுக்கும் கோட்டா சலுகையெல்லாம் குடுக்கணும்னு போராட ஆரம்பிச்சு விடுவானுக.


Seshan Thirumaliruncholai
பிப் 01, 2024 20:35

ஜாதி மதம் குறிப்பிட தயக்கம் காட்டுபவர்கள் அரசின் சலுகைகளை பெறுவதில் தங்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்படுவதை தவிர்த்திட. தமிழக தலைமை அமைச்சர் பிறப்பில் ஹிந்து. ஆனால் இந்து மத கொள்கைகளில் நம்பிக்கையற்றவர். பிற மத வணங்கும் இடங்களுக்கு செல்வார். அந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை. அவர் போன்றோர் ஜாதி மதம் குறிப்பிடாமல் இருப்பது சரி. அதற்கு விலை அரசு சலக்குகளை தியாகம் செய்தவர்கள். -


vbs manian
பிப் 01, 2024 20:27

ஞானிகள் யோகி மட்டுமே சாதி மதம் இல்லாமல் வாழ்பவர்கள்.


M S RAGHUNATHAN
பிப் 01, 2024 17:55

நீதிபதிகள் கடைசியில்.கூறிய கருத்துகள் வரவேற்கத்தக்கது. பள்ளியில், அலுவலகங்களில் விண்ணப்பங்களில் குறிப்பிட தேவை இல்லை என்று அரசு சொல்லலாம்.


GMM
பிப் 01, 2024 17:47

(பெயர்) சாதி, மதமற்றவர் என அரசு சான்று வழங்க சட்டத்தில் இடம் இல்லை. திராவிட இயக்கம் புரிய வேண்டிய தெளிவான தீர்ப்பு.


Kanagaraj M
பிப் 01, 2024 17:28

மதத்திலிருந்து வெளியேறி Non religion முறையை பின்பற்ற ஒரு சட்டம் வர வேண்டும்.


rama adhavan
பிப் 01, 2024 17:20

வர வர தீர்ப்புகள் நெத்தி அடியாக உள்ளன. ஹாஹாஹா


DVRR
பிப் 01, 2024 17:17

அப்போ அரசியல் இந்த சட்டம் செய்து விட்டு???சாதி மதம் பார்ப்பது தவறு என்று காலையிலிருந்து இரவு வரை ஒரே டப்பா அடிக்கின்றார்கள் இவர்கள்?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ