உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை; லோக்சபாவில் ராகுல் பேச்சு

பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை; லோக்சபாவில் ராகுல் பேச்சு

புதுடில்லி: 'உற்பத்தி துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது. உற்பத்தி துறை மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் பேசியதாவது: ஜனாதிபதி உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை. புதிதாக ஒன்றும் இல்லை. ஜனாதிபதி உரை என்பது இப்படி இருக்க கூடாது. நடந்ததையே திரும்பிச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. உற்பத்தி துறை மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ikq5subv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உற்பத்தி துறை

நாட்டின் உற்பத்தி 15 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக தற்போது குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தீர்வு காணப்படவில்லை. பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை.பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டம் குறித்து அடிக்கடி கூறுகிறார். நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் அதானி நிறுவனத்துக்கே அரசு ஆதரவாக உள்ளது. வேலையில்லா பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார். நாட்டில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் உள்ளது.

மருத்துவம்

நம் நாட்டில் உற்பத்தியை ஒருங்கிணைக்கக் கூடிய மிகச் சிறப்பான நிறுவனங்கள் பல உள்ளன. டாட்டா, பஜாஜ் போன்ற பல நிறுவனங்கள் உற்பத்தி ஒருங்கிணைக்கின்றன. உற்பத்தி ஒருங்கிணைப்பை நாம் சீனாவிடம் வழங்கி இருக்கிறோம். உலகம் வேகமாக மாறி வருகிறது. போர், மருத்துவம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மாற்றம் உருவாகி வருகிறது. செல்போனின் அனைத்து உதிரி பாகங்களும் சீனாவில் தான் தயாரிக்கப்படுகின்றன. சமூக பதற்றம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மருத்துவம் கல்வி உணவு முறை அனைத்தும் மாறப்போகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

அப்பாவி
பிப் 04, 2025 08:54

நல்ல வேளை... சீனாவிலிருந்து பரோட்டா, டீ மாஸ்டர்களை இறக்குமதி செய்யலை.


M Ramachandran
பிப் 04, 2025 01:05

நேர்மை என்பது உங்களுக்கு கேள்வி குறி. சீனாவிடம் தீருட்டு தனமாக உங்கள் குடும்பம் பெற்ற தொகை $300 கணக்கை அப்போதையா பொம்மை பிரதமர் மன்மோகனு சிங்கத்திற்காவதுக்காவது தெரிவித்தேர்கள. அந்த பணம் என்னவானது


இராம தாசன்
பிப் 03, 2025 21:11

//சமூக பதற்றம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது// - அதை ஏற்படுத்துவதே நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் தானே


Ramesh Sargam
பிப் 03, 2025 19:55

குறைகூறுவதை thavira raagulukku verondrum theriyaadhu.


Bye Pass
பிப் 03, 2025 19:47

காலா காலத்தில் கால் கட்டு போட்டிருக்கலாம் ..


Karthik
பிப் 03, 2025 19:42

ராவூல் சொன்னதின் அர்த்தம் .. பட்ஜெட்டில் என்போன்ற /55 வயோதிக இளைஞருக்கு ??? எந்தத் திட்டமும் இல்லை என்று. நான் கேட்கிறேன்.. ரிட்டையர்டு ஆகப்போற வயசுல உனக்கென்ன திட்டம் வேண்டி கிடக்கு??


subramanian
பிப் 03, 2025 19:00

தூங்காமல் பட்ஜெட் பேச்சை கேட்க வேண்டும். இயல்பான விளையாட்டு போக்கிரி புத்தி விட்டு, மக்களின் சேவகன் வேலைக்கு தகுதி பெற வேண்டும்.


தத்வமசி
பிப் 03, 2025 18:32

வேலை செய்பவனுக்குத்தான் அந்த கவலை. வெளிநாட்டுக் கை கூலிகளுக்கு எந்த திட்டமும் அளிக்க இயலாது.


Laddoo
பிப் 03, 2025 18:23

ஏங்க ராவூல் வேல இல்லேன்னா பட்டாயாவுக்கு போக வேண்டியதுதானே.


B MAADHAVAN
பிப் 03, 2025 18:13

மூளை இல்லாதவன் எல்லாம், அரசியலில், துண்டு சீட்டு வைத்து அதன்படி தான் பேசுவார்கள். இடையில் யாராவது குறுக்கு கேள்விகள் கேட்டால், சமயத்தில் கிறுக்குத் தனமான பதில்கள் தான் வரும். ஏதோ பாவம் பிழைப்பிற்காக குடும்பத் தொழில் அரசியல் செய்ய வந்து விட்டார். கோமாளியாக இருந்தாலும் ஏமாளி இல்லை.... ஆனால், நம் நாட்டிற்கு எதிராக பேசி, வேண்டுமென்றே வெளிநாட்டினர் மத்தியில் அவப் பெயரை உண்டு பண்ணும் துரோகிகள் ஒழிக்கப் படவேண்டும் கட்டுப் படுத்தப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை