உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விதிமீறிய கட்டங்களுக்கு விலக்கு கேட்க உரிமை கிடையாது

விதிமீறிய கட்டங்களுக்கு விலக்கு கேட்க உரிமை கிடையாது

புதுடில்லி, மே 2- 'விதிகளை மீறி கட்டடம் கட்டிவிட்டு, பிரச்னை எழுந்த பின் நீதிமன்றத்துக்கு வந்து விலக்கு தாருங்கள்; சலுகை காட்டுங்கள் என்று கேட்க எவருக்கும் உரிமை கிடையாது. விதிகளை மதிக்காமல் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் இடித்து தள்ளுவதே சரியான தீர்வு' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனிதாபிமானத்தின் பெயரால் அல்லது வேறு காரணங்களால், விதி மீறிய 'பில்டர்'களை பாதுகாக்க, மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதை நீதிபதிகள் கண்டித்தனர். மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில், முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டடத்தை இடிக்க கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து கட்டட உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதுவே தீர்வு

அப்போது, 'விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்த மாநில அரசுகள் அவ்வப்போது சட்டம் இயற்றுகின்றன. விதி மீறியதற்காக அபராதம் அல்லது தண்டத்தொகை செலுத்தினால், கட்டடத்தை முறைப்படுத்தியதாக அறிவித்து சான்றிதழ் தருகின்றன. எங்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்' என, மனுதாரர் தரப்பில் வாதிட்டனர். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தெரிந்தே சட்டத்தை மீறுபவர்களை வெறும் அபராதத்துடன் தப்ப விடக்கூடாது. விதிகளை மீறி அவர்கள் கட்டிய கட்டடங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை இடித்து தள்ள வேண்டும். விதி மீறலுக்கு இதுவே தீர்வு. அதில், யாருக்கும் விலக்கு அளிக்கக் கூடாது. முறைப்படுத்தல் அல்லது வரையறை செய்தல் என்ற பெயரில் அரசாங்கமே விதிமீறலை அங்கீகரிப்பது, அனைவருக்கும் பொதுவான சட்டங்களில் இருந்து, வசதி படைத்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும் கலாசாரத்தை வளர்க்கும்.

உத்தரவு

விதிகளை மதிக்காமல் அதை புறக்கணிப்பவர்களை சட்டம் பாதுகாக்கும் எனில், ஒழுங்கான, நியாயமான சமூகத்தில் சட்டத்தின் பாய்ச்சலை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். சட்டத்தை மதிக்காமல் அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை எழுப்பிய பின், அதை முறைப்படுத்தும்படி கோர எவருக்கும் உரிமை கிடையாது. எனவே, சட்டவிரோத கட்டுமானம் இடிக்கப்பட வேண்டும்; இதில் விலக்கு அளிக்க முடியாது. சட்டத்தின்படி நீதி வழங்கப்பட வேண்டும்.மாநில அரசுகள், இதுபோன்ற விதி மீறல் கட்டடங்களுக்கு அபராதமோ அல்லது கட்டணமோ விதித்து அதை முறைப்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. அவர்களின் நடவடிக்கைகள், நகர்ப்புற திட்டமிடலில் விதிமீறல்களை ஊக்குவிப்பதோடு, சட்டம் -- ஒழுங்கை செல்லரிக்கச் செய்கிறது.சட்ட விரோத கட்டுமான வழக்குகளை கையாளும் போது, அனுதாபத்தை தவிர்த்து கடுமையான அணுகுமுறையை நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழக்கில் கொல்கட்டா உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

நிக்கோல்தாம்சன்
மே 02, 2025 17:52

அவர்களுக்காக கையெழுத்திட்ட அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்று கோர்ட் சொல்லுமா


thehindu
மே 02, 2025 17:00

பாராளுமன்றத்திலும் ராமர்கோவிலிலும் படேல் சிலையிலும் அனைதுவிதிகளும் கடைபிடிக்கப்பட்டுவிட்டதா ?


visu
மே 02, 2025 17:37

நிச்சயமாக எல்லா விதிகளும் கடை பிடிக்க பட்டன


Radhakrishnan Balasubramanian
மே 02, 2025 21:49

அறிவாலயத்திலும், சத்யமூர்த்தி பவனில், ஈ சி ர் வீடுகளிலும் அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்பட்டனவா?


M S RAGHUNATHAN
மே 02, 2025 15:52

விதி மீறல் கட்டிடங்களுக்கு எப்படி வரி விதிக்கப் பட்டு, வசூலிக்கப் பட்டது. மாநகராட்சி, நகராட்சி மேயர், தலைவர்கள், ஆணையர்கள், ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை இல்லை ? விதி மீறல் கட்டிடம் " fit for occupation" சான்று கொடுத்த அதிகாரிக்கு என்ன தண்டனை ? விதி மீறல் கட்டிடத்திற்கு எந்த அடிப்படையில் மின்சார இணைப்பு கொடுக்கப் பட்டது ? மின்சார இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு மக்களை படாத பாடு படுத்தும் மின்சார அலுவலகங்கள் எப்படி விதி மீறல் கட்டிடங்களுக்கு இணைப்பு கேட்டவுடன் கொடுத்தார்கள் ? இதே உச்ச நீதி மன்றத்தின் மற்ற நீதிபதி இம்மாதிரி கட்டிடங்களை புல்டோசர் வைத்து இடிப்பது தவறு என்று சொல்லி இருக்கிறார்கள். ஆளுக்கேத்த தீர்ப்பு. .


சிந்தனை
மே 02, 2025 14:25

இதுபோன்ற சில நீதிபதிகளால் ஒட்டுமொத்த நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வருமானம் பாதிக்கிறது. இப்படி எல்லாம் உடனடியாக தீர்ப்பு சொல்லக்கூடாது. 200 வருடம் தள்ளி வைத்து தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்..


Sivakumar
மே 02, 2025 13:31

Very true!!


ஆரூர் ரங்
மே 02, 2025 13:13

மாநிலத் தலைநகரில் நெருக்கடியான பகுதியில் நூற்றுக்கணக்கான விதிமீறல் வணிக வளாகங்கள் உள்ள பகுதிக்கு போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் வழித்தட டிசைன் அமைத்துள்ள அரசை என்ன செய்ய? இடித்துத்தள்ள கோர்ட் உ‌த்தரவு பிறப்பித்தும் மூன்று பெரும் தீவிபத்துக்கள் நிகழ்த்தும் இது நடந்துள்ளது.


RAMAKRISHNAN NATESAN
மே 02, 2025 11:51

இந்திய நீதித்துறை, அரசாங்கம் என அனைத்திலும் ஊழல்... சொல்லப்போனால் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் இருந்து வெளிவரத் தகுதியான நாடுதானா என்ற ஐயம் எழுகிறது ......


Anvar
மே 02, 2025 11:50

அப்போ கட்டிட சான்று கொடுக்கும் அதிகாரிகளுக்கு அபதாரம் இல்லையா ? காசு வாங்கிட்டு சான்றிதழ் கொடுப்பவனுக்கு என்ன பதில் நீதி மன்றம் சொல்ல போகிறது


பாமரன்
மே 02, 2025 10:48

இந்த பெஞ்ச் அசத்தல் தீர்ப்புகள் தருகிறது... இதற்கு முன் இவர்கள் கொடுத்த தமிழ் நாடு லப்பர் இஷ்டாம்பு பற்றிய தீர்ப்புக்கு பொங்குன பகோடாஸ் இப்போ மூக்கை சொறியறது தெரியுது.. இருந்தாலும் பரவாயில்லை...


baala
மே 02, 2025 10:16

அதை வாங்கிய அயோக்கியர்களிடம் வாங்கி கொள்ளலாமே


முக்கிய வீடியோ