உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் போஸ்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் போஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ''மேற்கு வங்கத்தில் குண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். மென்மையான போக்கையே அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை,'' என, அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், ஒடிஷாவைச் சேர்ந்த மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

சர்ச்சை

கடந்த 10ம் தேதி இரவு, ஆண் நண்பருடன் அவர் வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை கடத்தி சென்று மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்படி, அவரது ஆண் நண்பர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூனில், கொல்கட்டாவில் சட்டக் கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. துர்காபூர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, 'இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்ல வேண்டாம்' என கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தொடர்ச்சியான பலாத்கார சம்பவங்கள், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன.இந்நிலையில் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் அளித்த பேட்டி:மேற்கு வங்கத்தில் குண்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். அவர்கள் மென்மையான போக்கையே கடைப்பிடிப்பதால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குண்டர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மாநிலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாலியல் குற்றங்களை பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது. இச்சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துகின்றன.

முதன்மை கடமை

பெண்கள் எந்த நேரத்திலும், எந்த நாளிலும் வெளியே சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையில், மேற்கு வங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும். துர்காபூர் சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாநிலத்தில் அரசு மாறும். ஆனால், சட்டம் - ஒழுங்கில் சமரசம் செய்யவே கூடாது. சட்டம்- - ஒழுங்கை பேணுவதே போலீசாரின் முதன்மை கடமை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மேற்கு வங்க காவல் துறையில் உள்ள ஒரு பிரிவினர், ஊழல் நிறைந்தவர்களாகவும், அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவும் உள்ளனர். இந்த அதிகாரிகளை அகற்ற வேண்டும். இது, ஆளும் அரசின் பொறுப்பு. காவல் துறை நடுநிலையுடன் இருக்க வேண்டும். ஆளுங்கட்சியின் குரலாக இருக்கக் கூடாது.இந்நாட்டில் அனைவருக்கும் வாழ உரிமை உள்ளது. இதை, நம் அரசியலமைப்பு உறுதி செய்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் குற்றங்களால், இந்த உரிமை பாதுகாக்கப்படவில்லை. இது தனிப்பட்ட பாதுகாப்புக்கு மட்டுமல்ல; அரசியலமைப்பிற்கே அச்சுறுத்தல்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சி.முருகன்.
அக் 21, 2025 04:48

பேடியோட அடி வருடியாடா நீ


Kasimani Baskaran
அக் 21, 2025 03:52

கேடுகெட்ட மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டபின் கவர்னர்களை வைத்து இது போல வெறும் உருட்டு மட்டுமே செய்ய முடியும். காவல்துறையில் பாதிக்கு மேல் வேறு மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.


சிட்டுக்குருவி
அக் 21, 2025 00:45

இந்த கருத்தைப்பார்த்தால் ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை போலிருக்கின்றது .சட்டங்கள் எல்லாம் சரியாகவேதான் இருக்கின்றன .அதை நடைமுறைப்படுத்துபவர்களின் அறியாமைதான் இதற்க்கெல்லாம் காரணம் .மாநிலத்தில் உயர்காவல்துறை அதிகாரி DGP பதவியேற்கும்போது ஒரு உறுதிமொழியை எடுப்பார் .இது எல்லாருக்கும் தெரிந்ததே .அந்த உறுதிமொழியை அவர் காப்பாற்ற தவறினால் என்ன செய்வதென்று யாரும் யோசிப்பதில்லை .ஒருவர் பதவி பிரமாணம் செய்து கடமையை பதவிப்பிரமணப்படி செய்யவில்லையென்றால் சட்டத்தில் அது கிரிமினல் குற்றம் ஆகும் .அதன்படி அவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்து ,நீதிமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்து சிறைத்தண்டனையும் பெறலாம் .இதை யாராவது பொதுநல வழக்கோ அல்லது குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களோ செய்யலாம் .நாட்டில் யாராவது ஒருவருக்கு இது நடந்தால் மற்றவர்களும் தெரிந்து கடைமையை செய்வார்கள்.சட்டப்படி காவல்துறை, நீதிமன்றம் ,சட்டம் மன்றம் இவைமூன்றுமே சட்டத்தில் தனித்துவமாக இயங்கும்படி தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது .நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கடமையை செய்வதில் யாரும் யாவரையும் கட்டுப்படுத்தமுடியாது .நாடு சுதந்திரம் அடைந்த ஆரம்பகாலங்களில் அவ்வாறு தான் நடந்துகொண்டிருந்தது .காலப்போக்கில் ஊழலில் கூட்டு காரணங்களினால் அந்தப்போக்கு மாறிவிட்டது .ஓவ்வொரு மாநிலத்திலும் அரசியல்வாதி காவல்துறை கூட்டு அதிகாரத்தில் இருந்து பொதுமக்கள் சிவில் உரிமைகளை பாதுகாக்க civil rights protection அமைப்பு தேவை .


Ramesh Sargam
அக் 20, 2025 23:13

தமிழகத்தில் ஆண்கள், பெண்கள், அரவாணிகள், பாட்டிகள், மூன்றுமாத குழந்தைகள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த கொடுமையை யார் கேட்பது?


சமீபத்திய செய்தி