உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழிவாங்கும் அரசியல் இருக்காது: சொல்கிறார் பட்னவிஸ்

பழிவாங்கும் அரசியல் இருக்காது: சொல்கிறார் பட்னவிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : '' மஹாராஷ்டிராவில் அடுத்த ஐந்தாண்டுகள் மாற்றத்திற்கான அரசியல் இருக்குமே தவிர, பழிவாங்கும் அரசியல் இருக்காது,'' என முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பட்னவிஸ் கூறியதாவது: சட்டசபை தேர்தல் முடிவுகள், மக்களின் அன்பு, எதிர்பார்ப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. சமூகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையில் மாநிலம் தொடர்ந்து முன்னேறிச்செல்லும். அடுத்த ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியை வழங்குவோம். மாநிலத்தில் மாற்றத்திற்கான அரசியல் தான் இருக்கும். பழிவாங்கும் அரசியல் இருக்காது.ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் என்னுடன் உள்ளனர். கூட்டணியானது அதன் வேகத்திலும், திசையிலும் உறுதியாக உள்ளது. எங்களின் பணி மட்டுமே மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

THANKS RAJ
டிச 06, 2024 16:11

மராட்டி மக்கள் சிங்கேவுக்கு தான் ஓட்டு போட்டார்கள் அதனால் தான் பாஜக 133 இடங்களை பெற்றது. நியாயமாக பார்த்தால் சிண்டே தான் முதலமைச்சராக இருக்க வேண்டும். அவருக்கு ராசி உள்ளது.


அப்பாவி
டிச 06, 2024 12:23

ஷிண்டேயை ஓரங்கட்டும் அரசியல் ஆரம்பிங்க. புல்லுருவிகள் எங்கேயும் களையெறியப் பட வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
டிச 06, 2024 06:33

இந்திய அரசியலே தூய்மை படுத்தப்படவேண்டும்


Tamil Inban
டிச 06, 2024 05:02

ஷிண்டே கட்சியை திரும்ப ஒடச்சிடுவீங்க , அது கன்பர்ம்


Rpalni
டிச 06, 2024 07:43

ஷிண்டேவுக்கு பதவி வெறி அதிகம். சிவசேனாவின் கொள்கைகள் பாஜகவினுடையதே. சிவசேனா கட்சி எக்ஸ்பய்ரி தேதி ஓவர். கட்சி உடைந்தால் நல்லதே. தீவிர ஹிந்துக்களே சீக்கியர்கள். இந்தியாவில் முகலாயர்களை ஒழிக்கும் வரை தாடியை மழிப்பதில்லை என்று சபதம் செய்தவர்களே சீக்கியர்கள்.


SANKAR
டிச 06, 2024 00:13

appa ithu varai irunthathaa ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை