உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியர்கள் அதிகம் பேர் கூகுளில் தேடியவை இவைதான்!

இந்தியர்கள் அதிகம் பேர் கூகுளில் தேடியவை இவைதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2024ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகள், இடம், நபர்கள், விளையாட்டு உள்ளிட்ட பட்டிலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் மொபைல் இல்லாத ஆளே கிடையாது. நமக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும், நமது மனதில் வந்து தோன்றுவது கூகுள் தான். அப்படி தேடும் அனைத்தும் கூகுள் நிறுவனத்தால் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில், 2024ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பேர் எதை தேடினர் என்ற விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.அதிகம் பேர் தேடி பார்த்த, உணவு வகைகள், இடம், நபர்கள், விளையாட்டு உள்ளிட்ட பட்டிலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

அதிகம் பேர் தேடிய 'டாப்' 5 நபர்கள் யார்?

1. வினேஷ் போகத் (மல்யுத்த வீராங்கனை)2. நிதீஷ் குமார் (பீஹார் முதல்வர்)3. சிராக் பஸ்வான் (மத்திய அமைச்சர்)4.ஹர்திக் பாண்டியா (கிரிக்கெட் வீரர்)5. பவன் கல்யாண் (ஆந்திரா துணை முதல்வர்)அதிகம் தேடிய 'டாப்' 5 விளையாட்டு1. ஐ.பி.எல்.,2. டி 20 உலக கோப்பை3. ஒலிம்பிக்4. புரோ கபடி லீக்5.இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து)

அதிகம் தேடிய 'டாப்' 10 கிரிக்கெட் போட்டிகள்:

1. இந்தியா - இங்கிலாந்து2. இந்தியா-வங்கதேசம்3.இந்தியா-ஜிம்பாப்வே4.இலங்கை- இந்தியா5.இந்தியா- ஆப்கானிஸ்தான்6. இந்தியா- தென் ஆப்ரிக்கா7. இந்தியா- பாகிஸ்தான் 8.பாகிஸ்தான்-இங்கிலாந்து9.பெங்களூரு அணி- சென்னை அணி (ஐ.பி.எல்.,)10. சென்னை அணி- பஞ்சாப் அணி (ஐ.பி.எல்)

அதிகம் தேடிய 'டாப்' 10 உணவு வகைகள்:

1. போர்ன் ஸ்டார் மார்ட்டினி ரெசிபி2. மாங்காய் ஊறுகாய் ரெசிபி3. தனியா பஞ்சிரி ரெசிபி4. உகாடி பச்சடி ரெசிபி5. சார்னம்ரித் ரெசிபி6. இமா தக்ஷி ரெசிபி7. பிளாட் ஒயிட் ரெசிபி8. கஞ்சி ரெசிபி9. சங்கர்பாலி ரெசிபி10. சம்மந்தி ரெசிபி

அதிகம் தேடிய 'டாப்' 10 இந்தியத் திரைப்படங்கள்

1. ஸ்திரீ 2 (ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர்)2. கல்கி 2898 ஏடி (பிரபாஸ், அமிதாப், கமல், தீபிகா)3. 12வது பெயில் (விக்ராந்த் மாசே)4. லாபட்டா லேடீஸ் (நிதான்ஸி கோயல்)5. ஹனுமன் (தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர்)6. மகாராஜா (விஜய் சேதுபதி)7. மஞ்சுமெல் பாய்ஸ் (சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பஸி)8. தி கோட் (விஜய், மீனாட்சி சவுத்ரி)9. சலார் (பிரபாஸ், பிரித்விராஜ்)10. ஆவேஷம் (பகத் பாசில்)அதிகம் தேடிய 'டாப்' 10 இடங்கள்1. அஜர்பைஜான்2. பாலி3. மணாலி4. கஜகஸ்தான்5. ஜெய்ப்பூர்6. ஜார்ஜியா7.மலேசியா8. அயோத்தி9. காஷ்மீர்10. தெற்கு கோவா

டிரண்டிங்கில் 'டாப்' 10;

1. ஐ.பி.எல்.,2.டி20 உலக கோப்பை3. பா.ஜ.,க.,4. 2024ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்5. ஒலிம்பிக்6. அதிகபட்ச வெப்பம்7. ரத்தன் டாடா8. காங்கிரஸ்9. புரோ கபடி லீக்10. இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kulandai kannan
டிச 11, 2024 19:59

சீமான் இல்லையா??


ديفيد رافائيل
டிச 11, 2024 13:13

Hello Dinamalar, இந்த list ல இருக்குற எதையுமே நான் search பங்ணவில்லை. நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும். நீங்க சொல்றது உணமைன்னு நம்புறேன்


சசிக்குமார் திருப்பூர்
டிச 11, 2024 12:56

கஞ்சி வைப்பது எப்படி டாப் 8. அடுத்த ஆண்டு சுடு தண்ணீர் வைப்பது எப்படி


செல்வேந்திரன்,அரியலூர்
டிச 11, 2024 12:47

அதே போல கூகுளில் தமிழர்கள் அதிகம் தேடியது ஊழலின் தந்தை யார் என்ற கேள்வியைதான்.


முக்கிய வீடியோ